நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். சேலத்தில் இருந்து பயணிகள் விமானத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: மக்களவை பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்த ஆட்சித் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் ஆர்வமுடன் அதிக அளவில் வந்து வாக்களித்துள்ளனர். அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்.
தற்போது அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், சேலம் மாவட்டத்தில் சூறைக்காற்றினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்படும். வாக்குப் பதிவின் போது போதிய பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அனைத்துத் துறைகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஏதும் உத்தரவிட முடியாது. எனினும், கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார். அப்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…