தருமபுரி மக்களவைத் தொகுதியில் 10 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தக் கோரி, திமுக வேட்பாளர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் மாவட்ட தேர்தல் அலுவலர் சு.மலர்விழியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தார். தருமபுரி செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில், மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் கோரிக்கை மனுவை மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியருமான சு.மலர்விழியிடம் அளித்தார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி பேரவைத் தொகுதியைச் சேர்ந்த நத்தமேடு கிராமத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடி எண்: 192, 193, 194 மற்றும் 195, கேத்திரெட்டிப்பட்டி வாக்குச் சாவடி எண்: 186, 187, ஜாலியூர் வாக்குச் சாவடி எண்: 196,197 மற்றும் அய்யம்பட்டி வாக்குச் சாவடி எண்: 181, 182 ஆகிய 10 வாக்குச் சாவடிகளை குறிப்பிட்ட கட்சியினர் கைப்பற்றி, பிற சமுதாயத்தினருக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்காமல் அவர்களே வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்குச் சாவடிகளில் கடந்த காலங்களிலும் இதுபோல நடந்துள்ளது. இதுகுறித்து முன்கூட்டியே மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளோம். முன்னெச்சரிக்கையாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், இதுபோல நிகழ்ந்திருக்காது. எனவே, ஜனநாயகத்தில் அனைத்து சமுதாயத்தினரும் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்டி, அந்த வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும். இது தொடர்பாக திமுக தலைமை வழிகாட்டுதல் பேரில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என்றார்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…