Categories: தமிழகம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: கூடுதல் டிஜிபி, ஐஜி நேரில் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஷகில் அக்தர் மற்றும் ஐஜி சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் வரும் ஜூன் 4-ஆம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவில், நான் கடந்த 1985-ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் இரண்டாம் நிலை காவலராக சேர்ந்தேன். கடந்த 2005-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் ரேடியோ டெலிகிராப் பிரிவு ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது உதவி சிறப்பு அதிகாரி பதவிக்கான தகுதிகள் இருந்தும் எனக்கு அந்தப் பதவி வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 8 வார காலத்துக்குள் எனக்கு உதவி சிறப்பு அதிகாரிக்கான பதவி உயர்வை வழங்க வேண்டும் என கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அதிகாரிகள் இதுவரை அமல்படுத்தவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மேல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஷகில் அக்தர் மற்றும் ஐஜி சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் வரும் ஜூன் 4-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Post
Share
Tags: dinamani

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

11 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

11 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

11 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

11 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

11 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

11 months ago