மக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் மாற்றம்

மக்கள் நீதி மய்யத்தின் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியின் புதிய வேட்பாளராக ஸ்ரீதர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை முழுமையாக அறிவிக்காமல் இருந்தன. இதில் காங்கிரஸ் கூட இன்று சிவகங்கை வேட்பாளரை அறிவித்துவிட்டது. ஆனால் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம் என்று கூறியிருந்த மக்கள் நீதி மய்யம் இன்னும் அறிவிக்கவில்லை.

Related Post

வேட்பாளர் தேர்வில் சில ஆலோசனைகளில் அக்கட்சி ஈடுபட்டிருக்கிறது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளரை மக்கள் நீதி மய்யம் மாற்றியுள்ளது. இதற்கு முன்னர் சிவக்குமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஸ்ரீதர் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.

முன்னதாக, கோவை சிங்காநல்லூரில் தனியார் பள்ளியில், மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கமல் கலந்துக் கொண்டார். இந்த கூட்டம் அனுமதியில்லாமல் நடத்தப்படுவதாக, தேர்தல் பறக்கும் படையினர் ஆட்சேபனை தெரிவித்ததனார். இதனால், கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago