Categories: தமிழகம்

இந்தா வைச்சுக்கோ… கைப்பற்றியதை மீண்டும் கொடுத்தது சீனா!

பீஜிங்:இந்தா வைச்சுக்கோ… என்று 5 நாட்களுக்கு பிறகு திரும்ப ஒப்படைச்சிருக்காம்… சீனா… என்ன விஷயம் தெரியுங்களா?தென்சீனக் கடலில் தான் கைப்பற்றிய அமெரிக்காவின் ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை 5 நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது சீனா.அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் கடல்சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தது. “கடல் மிதவை” எனப்படும் இந்த ஆளில்லாத நீழ்மூழ்கி கப்பல் நீரின் உப்பு தன்மையையும், வெப்பநிலையையும் சோதிக்கப் பயன்படுகிறது.கடந்த 15ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் தண்ணீருக்கு அடியில் ஆய்வில் இருந்த இந்த ஆளில்லா நீர்மூழ்கியை சீனக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இதனால் பெரும் பதற்றம் உருவானது. இதற்கு அமெரிக்கா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் நீர் மூழ்கியை பறிமுதல் செய்ததாக விளக்கம் அளித்த சீனா, உரிய நடைமுறைக்குப் பிறகு கப்பலை திருப்பி தருவதாகவும் உறுதி அளித்தது.ஆனால் உடனடியாக பதிலடி கொடுத்த டிரம்ப், “திருடப்பட்ட கப்பல் எங்களுக்கு வேண்டாம். அதனை அவர்களே வைத்துக் கொள்ளட்டும்” என்று தெரிவிக்க மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. நீர்மூழ்கியை திருடியதாக கூறிய டொனால்டு டிரம்பின் குற்றச்சாட்டிற்கு சீனா மறுப்பு தெரிவித்தது.பின்னர் 5 நாட்களுக்கு பின்னர் அந்த நீர்மூழ்கியை சீனா மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது.

Related Post
Share
Tags: vivegam

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago