Categories
தமிழகம்

பிரபல தமிழ் நடிகரியுடன், குத்தாட்டம் போடப்போகும் சன்னி லியோன்!

‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.

சன்னி லியோனுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். ஒரு முறை கொச்சிக்கு இவர் வந்திருந்த போது இவரைக் காண இவரது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், தமிழில் விஷால் நடிக்கும் ‘அயோக்யா’ படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளார்.

சண்டக்கோழி – 2 படத்துக்குப் பின் நடிகர் விஷால் நடிக்கும் படம் அயோக்யா.
இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளரான வெங்கட் மோகன், இயக்கிவருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படத்துக்கு விக்ரம் வேதா பட இசைமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைக்கிறார். டெம்பர் தெலுங்குப் படத்தின் ரீமேக் தான் அயோக்யா.

Leave a Reply