Categories
தமிழகம் தலைப்புச்செய்திகள்

கொரோனா: தஞ்சையில் 9 மாத கர்ப்பிணிப் பெண் உட்பட ஒரே நாளில் 5 பேர் பலி!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் 9 மாத கர்ப்பிணி உட்பட 5 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா வார்டுதஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Categories
தமிழகம் தலைப்புச்செய்திகள்

மதுரை: நீதிமன்ற பின்வாசல் வழியாக அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளம் காவலர்கள்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன், கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ, முதல்கட்டமாக ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ் மற்றும் முருகன் ஆகியோரை காவலில் எடுத்து மூன்று நாள்கள் விசாரித்தது. இந்நிலையில், விசாரணை முடிந்து, இன்று மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார். முன்வாசலில் செல்லும் சி.பி.ஐ அதிகாரிகள் அதன் அடிப்படையில், ஐவரும் நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயில் வழியாக…

Categories
தமிழகம் தலைப்புச்செய்திகள்

புதுச்சேரியில் சரணடைந்த `கறுப்பர் கூட்டம்’ சுரேந்தர் நடராஜன்!

கந்தர் சஷ்டிக் கவசம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் என்ற `யூ டியூப்’ சேனல் மீது பி.ஜே.பியினர் சென்னை நகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்தச் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 15-ம் தேதி கைது செய்தனர்.

Categories
இந்தியா

கேரளா: `ஸ்வப்னாவுடன் 9 முறை போனில் பேசிய அமைச்சர் ஜலீல்!’ – என்.ஐ.ஏ விசாரணையில் அம்பலம்

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் முதல் குற்றவாளி ஸரித், இரண்டாம் குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு என்.ஐ.ஏ விசாரணை வளையத்தில் உள்ளனர். ஸ்வப்னா சுரேஷ் மற்றும் ஸரித் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை பேசிய போன் அழைப்புகள் குறித்த விபரம் இப்போது வெளியே வந்துள்ளது. அதில், ஸ்வப்னா கேரள உயர்கல்வித்துறை…

Categories
தலைப்புச்செய்திகள்

Corona: கோவிட்-19 பாதிப்பைக் கண்டறியக் குரல் பரிசோதனை! ஆய்வாளர்கள் புதிய முயற்சி

கோவிட்-19 வைரஸ் பாதிப்பைக் கண்டறிவதற்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், குரலில் ஏற்படும் மாறுபாட்டின் மூலம் ஒருவருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பைக் கண்டறிய முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளனர் அறிவியலாளர்கள். பொதுவாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு அறிகுறிகள் தெரிவதில்லை. கடந்த ஜூனில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி 40% – 45% மக்கள் அறிகுறிகள் அற்ற ஏசிம்ப்டமடிக் வகையினராகத்தான் இருக்கின்றனர். மேலும் இவர்கள், தங்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை…

Categories
தலைப்புச்செய்திகள்

தஞ்சாவூர் அதிர்ச்சி: டாஸ்மாக் கடை வாசலில் இறைச்சிக் கடைக்காரர் வெட்டிக் கொலை!

தஞ்சாவூர் அருகே கோழி, இறைச்சிக் கடை நடத்திவந்த வியாபாரி ஒருவரை, 6 பேர் கொண்ட மர்ம நபர்கள், டாஸ்மாக் கடை வாசலில் வைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தனர். பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கொலைச் சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.கொலை செய்யப்பட்ட உதயக்குமார் தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாபேட்டை முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர், உதயன் என்கிற உதயக்குமார் (30).

Categories
தலைப்புச்செய்திகள்

கொரோனா:`சீனா முதலில் எச்சரிக்கவில்லை; நாங்கள்தான் அறிவித்தோம்!’ – WHO

கொரோனா வைரஸ், சீனாவில் உள்ள வுஹான் சந்தைப் பகுதியில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. சீனாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த வைரஸ், உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளிலும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவைவிட அமெரிக்கா, பிரேஸில், ரஷ்யா, இந்தியா, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து எனப் பல நாடுகள் வைரஸால் அதிக அளவில் பாதிப்படைந்து, பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகின்றன. இந்த விவகாரத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை…

Categories
தலைப்புச்செய்திகள்

நண்பர் வீட்டுத் திருமணம்; திடீர் நெஞ்சுவலி! – எப்படியிருக்கிறார் பொன்.மாணிக்கவேல்?

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நெஞ்சுவலி காரணமாகத் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.பொன்.மாணிக்கவேல்சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஐ.ஜியாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல். இவர் சிலை கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்து அதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதுடன் காணாமல்போன பழைமையான சிலைகளையும் மீட்டு வந்தார்.

Categories
Uncategorized

`Tik Tok போனா என்ன… சிங்காரி இருக்கே!?’ – ஜி.பி.முத்து, சூர்யா என்ன சொல்கிறார்கள்?

சீனா – இந்திய எல்லைப் பிரச்னை கடந்த சில வாரங்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், பொது மக்கள் அனைவரும் இந்திய அரசின் எதிர்வினைக்காகக் காத்திருந்தனர். இதற்கிடையில் சீனப் பொருட்களை பயன்படுத்துவதைத் தடைசெய்ய வேண்டும் எனப் பலரும் குரல் எழுப்பினர். ஆனால், அப்படிப் பொருட்களைத் தடைசெய்வதால் இழப்பு இந்தியாவுக்குதான் எனப் பொருளாதார…

Categories
தமிழகம் தலைப்புச்செய்திகள்

`மருத்துவக் கல்லூரி வரட்டும்.. ஆனால்?’ – 26 ஏக்கர் சர்ச்சையில் அரியலூர்

அரியலூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், 26 ஏக்கர் பரப்பளவில், மருத்துவக்கல்லூரி மற்றும் 700 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, அலுவலகங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தங்களது மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி உருவாவதை எண்ணி முதலில் மகிழ்ச்சி அடைந்தார்கள் இப்பகுதி மக்கள். ஆனால் இதற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம்தான் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. `அரசு கலைக்கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் மருத்துவக் கல்லூரி உருவானால், இந்த இரண்டு கல்லூரிகளுமே…