இந்தோனேஷியாவில் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டிகள்!!

ஆசிய விளையாட்டு போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய விளையாட்டு விழாவாக ஆசிய போட்டிகள் திகழ்ந்துவருகின்றன.

18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் இன்று கோலாகலமாக கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள், லேசர் ஒளி வெள்ளத்தில் சாகசங்கள், வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெற்றன. தொடக்க விழாவில் 4 ஆயிரம் கலைஞர்கள் கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தனர். 45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து சென்றனர். இந்திய வீரர் வீராங்கனைகள் குழுவிற்கு ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தேசியக்கொடி ஏந்தி தலைமை தாங்கி சென்றார்.

Related Post

ஆசிய போட்டிகளில் இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட 45 நாடுகளை சேர்ந்த 10,000 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் 572 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். அதிக பதக்கங்களை வெல்லும் முனைப்பில் இந்திய வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.

தடகளம், வில்வித்தை, டென்னிஸ், பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, கால்பந்து, ஹாக்கி, நீச்சல், துப்பாக்கி சுடுதல் உள்பட 40 வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 572 வீரர், வீராங்கனைகள் 36 போட்டிகளில் களமிறங்குகின்றனர். சுஷில் குமார் (மல்யுத்தம்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), மானு பாகெர் (துப்பாக்கி சுடுதல்), பி.வி.சிந்து (பேட்மிண்டன்), வினேஷ் போகத் (மல்யுத்தம்), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago