டோக்கியோ ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸில் மணிகா பத்ரா தோல்வி

Tokyo Olympics Tamil News: 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஆஸ்திரேலியா உள்பட 204 நாடுகளை சேர்ந்த 11,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். மேலும் 33 விளையாட்டுகளில் மொத்தம் 339 தங்கப்பதக்கத்துக்காக மோதுகிறார்கள்.

கடந்த ஆண்டே நடந்திருக்க வேண்டிய இந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சார்பில் மொத்தம் 127 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், ஒலிம்பிக் முதல் நாள் போட்டியில் இந்திய அணி சார்பில் களம் கண்ட மீராபாய் சானு பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் (49 கிலோ எடைப் பிரிவில்) வெள்ளி பதக்கத்தை வென்று பிரகாசமான ஆரம்பத்தை கொடுத்தார்.

நேற்று 2ம் நாள் பெரிய வெற்றிகள் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், இன்று 3வது நாளில் தகுதி சுற்றுகளை இந்திய அணியினர் வெற்றியுடன் துவங்கினர். குறிப்பாக இந்தியாவின் முதல் ஒலிம்பிக் வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி தனது அறிமுக போட்டியை வெற்றியுடன் துவங்கினார். ஆனால் தனது 32 வது சுற்று ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.

இதே போல் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், மற்றும் தருந்தீப் ராய் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் வில்வித்தை அணி தகுதி சுற்றில் கஜகஸ்தான் அணியை 6-2 என்ற கணக்கில் வீழ்த்திய நிலையில் காலிறுதி ஆட்டத்தில் கொரியாவிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Related Post

டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத் கமல் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி 2 வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆனால் பெண்கள் ஒற்றையர் பிரிவில் களம் கண்ட சுதிர்தா முகர்ஜி போர்ச்சுகல் அணியிடம் தோல்வியை தழுவினார்.

செய்லிங் பெண்கள் ஒற்றையர் ரேடியல் லேசர் பிரிவில் இந்தியா நேத்ரா குமணன் 15 புள்ளிகள் பெற்றுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உள்ள விஷ்ணு சரவணன் 20வது இடத்தில் உள்ளார்.

ஸ்கீட் ஷூட்டிங் பிரிவில் இந்திய அணி சார்பில் களமிறங்கிய மைரஜ் அகமது கான் மற்றும் அங்கத் பஜ்வா தகுதி பெறவில்லை. இருப்பினும், இன்றை நாள் முடிவிற்கு இந்திய அணி இன்னும் 3 போட்டிகளில் களமிறங்குகிறது.

பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் களம் கண்ட இந்திய வீராங்கனை மாணிக்க பத்ரா, தனது 3-வது சுற்றில் ஆஸ்திரியாவின் சோபியா போல்கனோவாவிடம் 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

மதியம் 3:06 நடக்கவுள்ள குத்துச்சண்டை போட்டியில் (ஆண்கள் – 75 கிலோ) ஆஷிஷ் குமார் சீனாவின் எர்பீக் டுஹெட்டா எதிர்கொள்கிறார். இதே போல் மதியம் 3:45-க்கு தொடங்கும் ஆண்களுக்கான 200 மீ நீச்சல் போட்டி தகுதி சுற்றில் (பட்டர்ஃபிளை) சஜன் பிரகாஷ் களம் காணுகிறார். மற்றும் மாலை 5:45 -க்கு நடக்கவுள்ள மகளிர் ஹாக்கி போட்டியில் ‘ஏ’ பிரிவில் இந்திய அணி ஜெர்மனி அணியை எதிர்கொள்கிறது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago