கொரோனா விதிமுறைகளை மீறிய சுரேஷ் ரெய்னா : மும்பை நட்சத்திர விடுதியில் கைது

மும்பையில், கோவிட் -19 விதிமுறைகளை மீறியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் அமலுக்கு வந்த இந்த உத்தரவு ஜனவரி 5 வரை, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மற்றும் மருந்து கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் இரவு 11 மணிக்குள் மூடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பை மஹாய் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள டிராகன்ஃபிளை கிளப்பில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் போலீசார் நடத்திய சோதனையில், முக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல், இருந்த விருந்தினர்கள், கிளப் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த 34 பேரில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் பாடகர் ரந்தாவா ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில் 188 பிரிவு (அரசால் அறிவிக்கப்பட்ட கடமைக்கு கீழ்ப்படியாமை) மற்றும் 269 (தொற்றுநோயை பரப்பக்கூடிய வகையில் செயல்படுகிறது) ஆகிய பிரிவுகளின் கீழ் ரெய்னாவை கைது செய்ததாகவும், பின்னர் அவர் ஜாமீன் பெற்றதால், உடனடியாக விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

இது குறித்து சுரேஷ் ரெய்னா தரப்பில் வெளியான அறிக்கையில்,

மும்பையில் ஒரு படப்பிடிப்புக்காக வந்த ‘சுரேஷ் ரெய்னா, ஒரு நண்பரால், கிளப்புக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் உள்ளூர் விதிமுறை பற்றி தெரியாத ரெய்னா, அதிகாரிகள் சுட்டிக்காட்டியவுடன், உடனடியாக தனது தவறை ஒப்புக்கொண்டு, தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். அரசால் வகுக்கப்பட்ட விதிகள் மற்றும் சட்டங்களை மிக உயர்ந்த மரியாதையுடன் மதிக்கும் ரெய்னா, எதிர்காலத்தில் இந்த தவறை செய்யமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil’

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago