Categories: அரசியல்

அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா பதவியேற்க எதிர்ப்பு… வலுக்கிறது!அடுத்தடுத்து வழக்கு தொடரப்படுவதால் ஆதரவாளர்கள் கிலி:போர்க்கொடி தூக்குவோரை மிரட்டி பணிய வைக்க உறவுகள் தீவிரம்

அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக சசிகலா பதவியேற்க, அக்கட்சியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அதன் வெளிப்பாடாக, ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன; இது, சசிகலா ஆதரவாளர்களிடம், கிலியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில், கட்சியில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்குவோரை மிரட்டி பணிய வைக்கும் பணியில், அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.அ.தி.மு.க., விதிகளின்படி, பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர், ஐந்து ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். தற்போது, பொதுச்செயலர் பதவிக்கு வர விரும்பும் சசிகலா, கட்சியில் ஐந்து ஆண்டுகளாக உறுப்பினராக இல்லை.நீக்கப்பட்டனர்கடந்த, 2011 டிச., 19ல், தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்த சசிகலா, அவரது கணவர் நடராஜன், உறவினர்கள் திவாகர், தினகரன், பாஸ்கரன், சுதாகரன், வெங்கடேஷ், ராமச்சந்திரன், ராவணன் உட்பட, 14 பேரை, அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி, ஜெயலலிதா உத்தரவிட்டார்.மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த பின், சசிகலா மட்டும், 2012ல் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட் டார்.
அவரது குடும்பத்தினர் யாரையும், ஜெயலலிதா இறக்கும் வரை, அ.தி.மு.க.,வில் சேர்க்கவில்லை.அ.தி.மு.க., சட்டவிதிப்படி, சசிகலா தொடர்ந்து,ஐந்து ஆண்டுகளாக உறுப்பினராக இல்லாத தால், அவர் பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடும் தகுதியை இழக்கிறார். இந்த அம்சத்தை முன்னிறுத்தி, ராஜ்யசபா எம்.பி., சசிகலாபுஷ்பா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதையடுத்து, சுதாரித்த, அ.தி.மு.க., நிர்வாகிகள், ‘சசிகலாவிற்காக கட்சியின் விதிகள் தளர்த்தப்படும்’ என, அறிவித்தனர்; அதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிகிச்சை விவரம் இந்நிலையில், சசிகலாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ‘ஜெயலலிதா மரணம் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்ற கோரிக்கை எழுப்பப்படுகிறது. ‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை வெளியிட வேண்டும்’ என, தி.மு.க., – பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்பிய பின், இந்த கோரிக்கை வலுத்து வருகிறது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி அமைப்பின் தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி, உச்ச நீதிமன்றத்தில், ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். தொடர்ந்து, சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில், நேற்று கீதா என்ற பெண், இந்த விவகாரத்தில் விசாரணை கோரி, வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு, வரும், 26ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.இப்படி, அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்படுவதால், சசிகலாவும், அவரது ஆதரவாளர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். அவரது பதவியேற்புக்கு இதெல்லாம் தடையாக அமைந்து விடலாம் என்பதால், எதிர்ப்பு கொடி துாக்கியவர்களை வழிக்கு கொண்டு வரும் வேலைகளில் அவர்கள் இறங்கி உள்ளனர்.முதலில், பேரம் பேசி படிய வைக்க பார்ப்பதாகவும், பலிக்காதபட்சத்தில், மிரட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், பிரச்னைக்கு தீர்வு காண, தற்காலிகமாக ஒருவரை பொதுச்செயலராக நியமிக்கவும், எதிர்ப்புகள் அடங்கிய பின், சசிகலாவை பொதுச்செயலர் ஆக்கவும், அவரது குடும்பத்தினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள தகவலும் வெளியாகி உள்ளது.’சைலன்ட் மோடில்’ முக்கிய நிர்வாகிகள்அ.தி.மு.க., பேச்சாளர்கள், நாஞ்சில் சம்பத், நடிகை விந்தியா, நடிகர் செந்தில் போன்றோர், சசிகலா, பொதுச்செயலர் ஆக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக, ‘வாட்ஸ் ஆப்’பில் தகவல் பரவியது.இதுதொடர்பாக, நாஞ்சில் சம்பத் மற்றும் விந்தியாவை தொடர்பு கொண்ட போது, அவர்களுக்கு பதிலாக பேசிய உதவியாளர்கள், ‘தவறான தகவல்’ என, ஒற்றை வரியில் பதில் அளித்தனர்.அதேபோல், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பலர், சசிகலா ஆதரவு நிலை எடுக்காமல், அமைதியாக உள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை; முடிவெடுக்க முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர் என, அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.’அ.தி.மு.க.,வில் பெரும் குழப்பநிலை நீடிப்பதையே இந்நிலை காட்டுகிறது’ என, முக்கிய அமைச்சர் ஒருவர், நம் நிருபரிடம் தெரிவித்தார்!- நமது நிருபர் –

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago