Categories: அரசியல்

போயஸ் கார்டனில் இருந்தது தகுதியா? : சசிகலாவுக்கு ‘மாஜி’ கடும் எதிர்ப்பு

திருச்சி: ”செஞ்சி கோட்டை ஏறியவரெல்லாம் தேசிங்கு ராஜன் இல்லை என்பது போல், போயஸ் கார்டனில் இருந்தார் என்பதற்காக, சசிகலா, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஆகிவிட முடியாது,” என, அ.தி.மு.க., முன்னாள், எம்.எல்.ஏ., சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.அ.தி.மு.க.,வை, எம்.ஜி.ஆர்., துவங்கிய போது, திருச்சி மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டவர், சவுந்தர்ராஜன். திருச்சி, இரண்டாவது தொகுதி, எம்.எல்.ஏ.,வாக, 1977 முதல், 1984 வரை இருமுறை இருந்துள்ளார். அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவி சர்ச்சை குறித்து, திருச்சியில், நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: கட்சி என்றால், ஜனநாயகம் இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள்.
ஆனால், சசிகலாவை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வர். செஞ்சி கோட்டையில் ஏறியவரெல்லாம் தேசிங்கு ராஜா ஆகிவிட முடியாது. அது போல், பக்கத்தில் இருந்தார், போயஸ் கார்டனில் தங்கியிருந்தார் என்பதற்காக, சசிகலாவை, பொதுச் செயலராக்க முடியாது. யாராக இருந்தாலும், முறைப்படி பதவிக்கு வரட்டும். அது தான், அ.தி.மு.க., வளர்ச்சிக்கு நல்லது. வாரிசு தலைமை வேண்டும் என்றால், ஜெ.,வின் அண்ணன் மகள் தீபா வரட்டும். அப்படியில்லாமல், கட்சியினர் மற்றும் மக்களின் ஆதரவில்லாத சசிகலாவை, எப்படி கட்சியின் தலைவியாக ஏற்க முடியும். எம்.ஜி.ஆரால் சிறப்பாக வளர்க்கப்பட்ட கட்சி அழிந்து விடக்கூடாது என்ற அக்கறை யில் கூறுகிறேன். அந்த கும்பல் வந்தால், கட்சி அழிவது உறுதி. மக்களுக்கு நல்லது செய்வோர், ஆட்சியிலும், கட்சியிலும் பதவிக்கு வரவேண்டும் என்பதே என் ஆசை. இவ்வாறு சவுந்தர்ராஜன் கூறினார். உயிருக்கு ஆபத்து : சவுந்தர்ராஜன் கூறுகையில், ”நேற்று முன்தினம் முதல், பல்வேறு நம்பர்களிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். திருச்சி, ஐ.ஜி.,யிடம் மிரட்டல்கள் குறித்து, ஆதாரத்துடன் புகார் அளிக்க உள்ளேன்,” என்றார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago