Categories: அரசியல்

‘துணை வேந்தர் தேர்வில் முறைகேடு இல்லை’

சென்னை, ”அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கு, விரைவில் துணை வேந்தர் நியமிக்கப்படுவர். நேர்மையான முறையில், துணை வேந்தர் தேர்வு நடந்து வருகிறது,” என, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: அண்ணா பல்கலை மற்றும் அரசு பல்கலைகளில், துணை வேந்தர் நியமனம் தொடர்பாக, சில கட்சிகள், அரசு மீதும், தேர்வு கமிட்டி மீதும், பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளன. அவை அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.கல்வியில், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்திய அளவில், உயர் கல்வி மாணவர் சேர்க்கை விகிதம், 23.6 சதவீதம். தமிழகத்தில், 44.8 சதவீதமாக உள்ளது. இந்திய அளவில், தமிழகம் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது.ஒவ்வொரு பல்கலைக்கும் தகுதி வாய்ந்தவர்களை, துணை வேந்தராக நியமிக்க, தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையிலும் தேடுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.அவர்கள், தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று, அவற்றை ஆய்வு செய்து, மூன்று பேரை தேர்வு செய்து, கவர்னருக்கு பரிந்துரை செய்வர். அதில், ஒருவரை கவர்னர் தேர்வு செய்து, துணை வேந்தராக நியமிப்பார்.அதன்படி, அண்ணா பல்கலை துணை வேந்தர், விரைவில் நியமிக்கப்பட உள்ளார். தகுதியானவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக, தேடுதல் குழுவுடன், அரசு எந்த கருத்தும் பரிமாறிக் கொள்வதில்லை.பல்கலை துணை வேந்தர் பதவி பெருமைக்குரியது. அதற்கு களங்கம் ஏற்படாத வகையில் இருக்க வேண்டியது, நம் அனைவருடைய கடமை. கல்வியை பொறுத்தவரை, அரசு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. இதில், தவறு நடக்க வாய்ப்பு இல்லை.சென்னை பல்கலைக்கும், தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விரைவில் துணை வேந்தர் நியமிக்கப்படுவார். அ.தி.மு.க., அரசு, தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறக் கூடாது என்பதற்காக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.பொறியியல் கல்லுாரியில், 192 பேராசிரியர்களை நியமிக்க, தேர்வு நடத்தப்பட்டுள்ளது. காலியாக உள்ள பணியிடங்களால், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 1,683 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago