Categories: அரசியல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி இல்லை: நெடுவாசல் குழுவினரிடம் முதல்வர் உறுதி

சென்னை:’நெடுவாசல் கிராமத்தில் செயல்படுத்த உள்ள, ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு, மாநில அரசு அனுமதி வழங்காது. எனவே, போராட்டத்தை கைவிட வேண்டும்’ என, போராட்ட குழுவினரிடம், முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.நெடுவாசல் கிராம போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர், வேலு தலைமையில், 11 பேர் கொண்ட குழுவினர், நேற்று சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் செயல்படுத்த உள்ள, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, மத்திய அரசு கைவிட வேண்டும் என, கோரிக்கை மனு அளித்தனர்.அவர்களிடம், முதல்வர் கூறியதாவது:நெடுவாசல் விவசாயிகளின் பிரச்னைகளை, பிரதமரிடம் எடுத்துரைத்தேன்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில், வணிக ரீதியாக உற்பத்தி செய்ய, பெட்ரோலியம் சுரங்க குத்தகை உரிமம், மாநில அரசு வழங்கவில்லை.இத்திட்டத்தால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என, விவசாயிகள் கூறியுள்ளதால், இத்திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்காது. எனவே, நெடுவாசல் மக்களும், விவசாயிகளும், எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை.தமிழகத்தில், விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய எந்த திட்டமானாலும், அதை தமிழக அரசு செயல்படுத்தாது. இந்த உறுதியை ஏற்று, நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்தை கைவிட வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.போராட்ட குழு திருப்தி!போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர், வேலு கூறியதாவது:ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, அறவே ரத்து செய்ய கோரினோம்.ஜெ., ஆட்சியில், மீத்தேன் திட்டத்தை ரத்து செய்தது போல், அவர் வழியில் ஆட்சி நடத்தும் நாங்களும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, தடுத்து நிறுத்துவோம் என, முதல்வர் உறுதி அளித்தார்.ஹைட்ரோ கார்பன் திட்டம், ஆய்வு நிலையில் உள்ளது; இன்னும் துவக்கப்படவில்லை. இத்திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் அனுமதியும், வணிக அனுமதியும், மாநில அரசு ஒருபோதும் வழங்காது என, உறுதி அளித்தார். அதை, நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்.இது தொடர்பாக, போராட்ட களத்தில் இருப்போரிடம் பேசி, நல்ல முடிவை விரைவில் தெரிவிப்போம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago