Categories
அரசியல்

பன்னீருக்கு நட்ராஜ் ஆதரவு தருவார்: பாண்டியராஜன் நம்பிக்கை

சென்னை: முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு மைலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் ஆதரவு தருவார் என்ற நம்பிக்கை உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறியுள்ளார். மைலாப்பூர் எம்.எல்.ஏ., நட்ராஜ் யாருக்கு ஆதரவு என வெளிப்படையாக அவர் கூறவில்லை. மக்களின் கருத்தை கேட்டு தனது முடிவை அறிவிப்பேன் என பேஸ்புக்கில் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில் அவரை, பள்ளி கல்வி அமைச்சர் மாபா பாண்டியராஜன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், .நீண்ட கால நண்பர் நடராஜை சந்தித்து பேசினேன். அவர் தற்போது நடுநிலையோடு உள்ளார். விரைவில் முதல்வர் பன்னீர் செல்வத்தை ஆதரிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
விரைவில் டிவிட்டரில் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பார். நாளுக்கு நாள் முதல்வருக்கு சட்டமன்ற, பார்லிமென்ட் உறுப்பினர்கள் ஆதரவு பெருகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply