Categories
அரசியல்

‘பொதுச்செயலராக சசிகலாவுக்கு தகுதி இல்லை’ : சசிகலா புஷ்பா எம்.பி., பேட்டி

சென்னை: ”அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு வர, சசிகலாவுக்கு எந்த அடிப்படை தகுதியும் இல்லை. அவர் பதவிக்கு வந்தால், அ.தி.மு.க., அழிந்து விடும்,” என, சசிகலாபுஷ்பா எம்.பி., தெரிவித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது: அ.தி.மு.க., விதிகளின்படி, தொடர்ந்து, 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே, பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட முடியும். சசிகலாவை, 2011ல், கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா; பின், 2012ல் சேர்க்கப்பட்டார். அவர் கட்சியில் சேர்ந்து, நான்கு ஆண்டுகளே ஆவதால், பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட, அடிப்படை தகுதி இல்லை.அழிந்து விடும் : ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. ஜெயலலிதாவுக்கு தான் மக்கள் ஓட்டு போட்டனர்; சசிகலாவிற்கு அல்ல.
சசிகலாவை பொதுச்செயலராக்கினால், என்ன செய்யலாம் என, கட்சியினர் என்னிடம் கேட்கின்றனர்; குமுறுகின்றனர்.’சேகர் ரெட்டி பணம், யாருடைய பணம்’ என, மக்கள் கேட்கின்றனர். ஜெயலலிதா பணத்திற்கு ஆசைப்படாதவர். கட்சிக்கு, 1,000 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. அவற்றை பறிக்கவே சசிகலா, பொதுச் செயலர் பதவிக்கு முயற்சிக்கிறார். சசிகலா பொதுச்செயலராக வந்தால், அ.தி.மு.க., அழிந்து விடும். ‘வழக்கு தொடருவேன்’ : ஜெயலலிதாவின் சொத்துக்கள், கட்சியின் சொத்துக்களாக மாற்றப்பட வேண்டும். கட்சியின் மூத்த தலைவர்கள், பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட வேண்டும். ‘அ.தி.மு.க., சட்ட விதிகளில், திருத்தம் செய்யக்கூடாது’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. ‘ஜெயலலிதா இறப்பில் மர்மம் உள்ளது; நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என, அடுத்த வாரம் வழக்கு தொடர்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply