Categories: அரசியல்

சென்னை சட்டம் ஒழுங்கு – கூடுதலாக 27 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

சென்னையில் சட்டம் ஒழுங்கை காக்க நான்கு ஏடிஜிபிக்கள் , ஐஜிக்கள் உட்பட 27 ஐபிஎஸ் அதிகாரிகளை கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்களின் எழுச்சியால் அவசரசட்டம் கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.போராட்டம் நடத்திய மாணவர்கள் , இளைஞர்கள் மெரினாவில் லட்சக்கணக்கில் கூடி இருந்தனர். பின்னர் போலீசார் மற்றும் அரசு வேண்டுகோளை ஏற்று பெரும்பாலானோர் கலைந்து சென்றனர்.

ஒரு சிலர் குழுக்கள் மட்டும் இளைஞர்கள் போர்வையில் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கலைந்து போக செய்தனர். இதில் ஏற்பட்ட வன்முறையில் போலீசார் தடியடி நடத்தினர்.
ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம் கொளுத்தப்பட்டது.

போலீசாரின் தாக்குதல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. போலீசாரும் அதிக அளவில் காயம் அடைந்தனர். இந்நிலையில் கமிஷனர் ஜார்ஜின் செயல்பாட்டை சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் விமர்சித்திருந்தனர்.கமிஷனர் ஜார்ஜை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையி நேற்றிரவு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சென்னையில் அமைதி ஏற்படுத்த போலீஸ் அதிகாரிகள் 23 பேரை கமிஷனர் ஜார்ஜின் உதவிக்கு அனுப்பி வைத்தார்.

இவர்களில் ஏடிஜிபிக்கள் சைலேந்திர பாபு , ஆஷிஷ் பங்க்ரா , சஞ்சய் அரோரா , மாகாளி , கரன் சின்ஹா, ராஜேஷ் தாஸ் , சுனில் குமார் , சுனில் குமார் சிங் உட்பட 11 ஏடிஜிபிக்கள் கருணாசாகர் , ராஜீவ் குமார் , , வன்னிய பெருமாள் , சந்தீப் ராய் ரத்தோர் , டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் உள்ளிட்ட 12 ஐஜிக்களும் அடக்கம்.

இவர்களில் 11 ஏடிஜிபிக்கள் , 12 ஐஜிக்கள் அடக்கம். இவர்கள் சென்னையின் பாதுகாப்புக்காக உதவி செய்து சென்னையில் போலீசாருக்கு ஆலோசனை கூறி அமைதி ஏற்பட வழிவகுப்பார்கள். ஆனால் நேற்றிரவு அனுப்பப்பட்ட அதிகாரிகளை , எல்லாம் சரியாக இருக்கிறது என்று கமிஷனர் ஜார்ஜ் திருப்பி அனுப்பினார்.அதன் பின்னர் மதியத்துக்கு மேல் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை கமிஷனர் ஜார்ஜ் அமைத்துள்ளார்.

இதில் சென்னையில் இணை ஆணையர்களுக்கு கீழ் இயங்கும் நான்கு மண்டலத்துக்கு நான்கு ஏடிஜிபிக்களை நியமித்துள்ளார். ராஜேஷ்தாஸ் கிழக்கு மண்டலம் விவேகானந்தர் இல்லம் , கரன்சின்ஹா -மேற்கு மண்டலம் திருமங்கலம் ஸ்டேஷன் , சைலேந்திரபாபு வடக்கு மண்டலம் பூக்கடை போலீஸ்ஸ்டேஷன், ஜெயந்த் முரளி தெற்கு மண்டலம் வடபழனி காவல் நிலையம். ஐஜிக்கள் மற்றும் எஸ்பிக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சுழற்சி முறையில் சென்னையின் நான்கு மண்டலங்களில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற உதவி புரிவார்கள் என்று கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago