Categories
அரசியல்

ஜனாதிபதியிடம் புகார் செய்ய எதிர்க்கட்சிகள் திடீர் திட்டம்

புதுடில்லி: செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தில், மக்கள் பிரச்னை குறித்து பார்லிமென்டில் பேச விடாமல் ஆளுங்கட்சி தடுத்து வருவதாக, ஜனாதிபதியிடம் புகார் செய்ய, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமளிகளால், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் முடங்கியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமை யில், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் முறையிட வேண்டும்; இதற்காக நேரம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மக்கள் பிரச்னைகள் குறித்து, பார்லிமென்டில் பேசுவதற்கு, மக்கள் பிரதிநிதியான தங்களுக்கு அனுமதி அளிக்காமல், ஆளுங்கட்சியான, பா.ஜ., முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இது குறித்தும், ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில், திரிண முல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Leave a Reply