Categories
அரசியல்

விவாதம் நடத்தலாமே?

ஐ.மு., கூட்டணி ஆட்சியில் நடந்த, ஹெலிகாப்டர் பேர ஊழலில், காங்., தலைவர் சோனியாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. இது குறித்து, பார்லிமென்டின் இரு சபைகளிலும், விவாதம் நடத்த வேண்டும். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு பற்றி விவாதம் நடத்த, அரசு தயாராக உள்ளது; ஆனால், எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை.அனந்த குமார், மத்திய அமைச்சர், பா.ஜ.,சோனியாவுக்கு தொடர்பில்லை!வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பான விஷயத்தில் நடந்த முறைகேட்டில், காங்., தலைவர் சோனியாவுக்கு எந்த தொடர்பும் இல்லை; சி.பி.ஐ.,யை, தன் கைப்பாவையாக பயன்படுத்தி, சோனியாவை அவமானப்படுத்த, பா.ஜ., முயற்சிக்கிறது; இந்த சதித் திட்டம், ஒருபோதும் வெற்றி பெறாது.அந்தோணி, முன்னாள் ராணுவ அமைச்சர், காங்.,அதிகாரிகளை துாண்டுகின்றனர்!டில்லி அரசுக்கு எதிராக செயல்பட, அதிகாரிகளை, பிரதமர் அலுவலகமும், கவர்னர் அலுவலகமும் துாண்டுகின்றன.
ஆம் ஆத்மி அரசை பழிவாங்க, கவர்னரையும், அதிகாரிகளையும், பகடை காயாக, பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு, அச்சுறுத்தல் விடுப்பதை, மக்கள் மன்னிக்க மாட்டர்.அரவிந்த் கெஜ்ரிவால், டில்லி முதல்வர், ஆம் ஆத்மி

Leave a Reply