Categories
அரசியல்

ஜெ., மருமகள் தீபாவுக்கு தொண்டர்கள் ஆதரவு

மயிலாடுதுறை: சீர்காழியில், ஜெ., அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து, ஒட்டப்பட்ட போஸ்டர்களை, அ.தி.மு.க.,வினர் கிழித்து அகற்றினர். நாகை மாவட்டம், சீர்காழி நகர் மற்றும் புறவழிச் சாலையின் பல இடங்களில், நேற்று, ஜெ.,வின் அண்ணன் மகள் தீபாவின் படத்துடன் கூடிய, போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.’நாகை மாவட்ட, அ.தி.மு.க., உண்மைத் தொண்டன்’ என்ற பெயரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில், ‘அ.தி.மு.க.,ன்னா அம்மா, அம்மாவிற்கு பின் அம்மாவின் வாரிசு, ஜெ.தீபா தான், தமிழ்நாட்டையும், கழகத்தையும் காப்பாற்ற சிங்க நடை போட்டு வா, ஆர்.கே.நகர் தொகுதியில், உன் பலத்தை காட்டு’ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டர்களை, அ.தி.மு.க.,வினர் சிலர் கிழித்து அகற்றினர்.இதேபோல, நேற்று, கடலுார் நகரில், பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில், ”புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, அ.தி.மு.க., கடலுார் மாவட்டம்’ என்ற வாசகமும், ஜெயலலிதா மற்றும் தீபாவின் படமும் அச்சிடப்பட்டிருந்தது.

Leave a Reply