Categories
அரசியல்

அமளியால் பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்…வீண்!: அலுவல்கள் நடக்காததால் மசோதாக்கள் தேக்கம்

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தால், பார்லிமென்ட் தொடர்ந்து முடக்கப்பட்டதால், நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் வீணடிக்கப்பட்டு உள்ளது. லோக்சபாவில், 15 சதவீதம், ராஜ்யசபாவில், 19 சதவீதம் மட்டுமே அலுவல்கள் நடந்துள்ளன. இதனால், ஜி.எஸ்.டி., தொடர்பான மசோதாக்கள் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் தேக்கமடைந்துள்ளன.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், நவ., 16ல் துவங்கியது; கூட்டத்தொடர் இன்றுடன் முடிகிறது. செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து விவாதம் நடத்துவது தொடர்பாக, ஆளும், பா.ஜ., தரப்புக்கும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தரப்புக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதால், இரு சபைகளும் ஒருநாள் கூட முழுமையாக செயல்படவில்லை.மீண்டும் முடக்கம்இந்நிலையில், இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், இரு சபைகளும் நேற்று மீண்டும் முடங்கின.
செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரச்னை எழுப்பின. ‘அகஸ்டாவெஸ்ட்லேன்ட்’ ஹெலிகாப்டர் பேர ஊழலில் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு தொடர்புள்ளதாக, ஆளும், பா.ஜ., தரப்பு பிரச்னை எழுப்பியது. இதனால் ஏற்பட்ட அமளி, கூச்சல், குழப்பத்தால், இரு சபைகளும் நேற்று பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.’பார்லி., கூட்டத்தொடரை நடத்தவிடாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுள்ளன’ என, பா.ஜ., தரப்பு குற்றஞ்சாட்டியது. ‘விவாதத்துக்கு தயாராக இருந்தோம்; ஆனால், பிரச்னையை ஆளுங்கட்சி திசைதிருப்பியதால் சபை நடவடிக்கைகள் முடங்கின’ என, எதிர்க்கட்சிகள் கூறின.இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், நடப்பு கூட்டத்தொடர் எவ்வித முக்கிய அலுவல்களும் இல்லாமல் முழுமையாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில், லோக்சபாவில், 15 சதவீதமும், ராஜ்யசபாவில், 20 சதவீதம் மட்டுமே அலுவல் நடந்துள்ளது.ஜி.எஸ்.டி., மசோதாகறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் வகையில், இதுவரை கணக்கில் காட்டாத வருவாயை, வரி மற்றும் அபராதத்துடன் கணக்கில் காட்டலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா மட்டுமே லோக்சபாவில் நிறைவேறியது. ராஜ்யசபாவில் விவாதம் நடக்காவிட்டாலும், பண மசோதா என்பதால், 14 நாட்களில் அது தானாகவே நிறைவேறியதாக கருதப்படும். இதைத் தவிர, மற்ற பல்வேறு முக்கிய மசோதாக்கள் குறித்தும், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்தும் எந்த விவாதமும் நடக்காததால் அவை தேக்கமடைந்து உள்ளன.அத்வானி விரக்திபார்லிமென்டின் நடப்பு கூட்டத்தொடர் முழுவதுமாக முடங்கியுள்ள நிலை ஏற்பட்டதற்கு, மூத்த, எம்.பி.,யும், மூத்த பா.ஜ., தலைவருமான அத்வானி, விரக்தியை வெளிப்படுத்தினார்.லோக்சபாவின் முதல் வரிசையில் அமர்ந்திருந்த அவர், நேற்று சபை ஒத்திவைக்கப்பட்ட போது, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி மற்றும் சில, எம்.பி.,க்களுடன் பேசினார். அப்போது, ‘எந்த விவாதமும், அலுவலும் நடக்காமல் பார்லிமென்ட் முடங்கியுள்ளது வேதனை அளிக்கிறது; எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிடலாமா என்று தோன்றுகிறது’ என, அத்வானி குறிப்பிட்டுள்ளார்.பார்லிமென்ட் முடங்கியுள்ளது குறித்து, கடந்த வாரம், அத்வானி ஏற்கனவே தன் அதிருப்தியை வெளிப்படுத்திஇருந்தார்.பார்லிமென்ட் முடக்கம் குறித்து வேதனை தெரிவித்துள்ள மூத்த, எம்.பி., அத்வானி கூறிய கருத்துகளுக்கு அவருக்கு வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவிக்கிறேன். தன் கட்சியில் ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காத நிலைப்பாட்டுக்கு எதிராக, அவர் போராடி வருகிறார்.ராகுல், துணை தலைவர், காங்கிரஸ்பிரதமர் மோடி அரசின் செயல்பாட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரும், அதன் துணை தலைவர் ராகுலும் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் இல்லா இந்தியா என்பதை உருவாக்குவதற்கான கடைசி அத்தியாயத்தை ராகுல் எழுதத் துவங்கியுள்ளார். முக்தார் அப்பாஸ் நக்விமத்திய அமைச்சர், பா.ஜ.,

Leave a Reply