Categories
அரசியல்

மத்திய அரசு திட்டத்திற்கு தமிழகம் ஆதரவு : ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

மதுரை: ”மத்திய அரசின் உதய், உணவு பாதுகாப்பு சட்டம் போன்ற நல்ல திட்டங்களை தமிழக அரசு ஏற்பதை வரவேற்பதில் என்ன தவறு இருக்கிறது,” என, மதுரையில் பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பினார்.அவர் மேலும் கூறியதாவது: சென்னையில் வர்தா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. மத்திய அரசுடன் மாநில அரசு ஒற்றுமை யாக செயல்பட்டால் தான் தமிழகத்திற்கு நல்லத் திட்டங்கள் கிடைக்கும். மத்திய அரசு புயல் சேதத்திற்கு இழப்பீடு வழங்கும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை, பிரதமர் மோடி எடுத்து வரும் நிலையில், சில வங்கி அதிகாரிகளால் மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.
இந்த நடவடிக்கையால், சேகர்ரெட்டியிடமிருந்து கறுப்பு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. தனக்கு பாதிப்பு என்பதால் இதை முன்னாள் மத்தியமைச்சர் சிதம்பரம் எதிர்க்கிறார். காங்., தலைமையிலான மத்திய அரசில், தினமும் ஒரு ஊழல் வெளியான போது, அதன் துணை தலைவர் ராகுல் பேசாதது ஏன்? உதய், உணவு பாதுகாப்பு சட்டம் போன்ற மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை தமிழக அரசு ஏற்றதை வரவேற்கிறோம். இதற்காக தமிழக அரசு மீது, மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதாக ஸ்டாலின் கூறுவதை ஏற்க முடியாது.சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், 75 நாட்களாக ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் டாக்டர்களும் சிகிச்சையளித்து உள்ளனர். மருத்துவ சிகிச்சை குறித்த சந்தேகங்களை தவிர்க்க, அறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு கடமை உண்டு என்றாலும் கூட, எல்லாவற்றிற்கும் சந்தேகம் எழுப்புவது சரியல்ல.ஜல்லிக்கட்டு மீதான வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கை குறித்து பிராணிகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதிலிருந்து மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த ஆர்வம் கொண்டுள்ளதை அறியலாம். இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும், என்றார்.சென்னையிலிருந்து தமிழிசை வந்த விமானத்தில் முன்னாள் மத்தியமைச்சர் அழகிரி, மனைவி காந்தியுடன் வந்தார். இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியதாக பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.

Leave a Reply