மொபைல்போன் ஒட்டுக்கேட்பு தேசதுரோகம்: ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி: ” பெகாசஸ் மூலம், இந்திய அரசியல் அமைப்புகள் உளவு பார்க்கப்பட்டு உள்ளன. இது தேச துரோகம்” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது : ஒட்டு கேட்பு விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமித்ஷா விலக வேண்டும். பெகாசஸ் மூலம் அனைத்து தரப்பினரும் உளவுபார்க்கப்பட்டு உள்ளனர். எனது மொபைல்போனும் ஒட்டு கேட்கப்பட்டு உள்ளது. ரபேல் தொடர்பான விசாரணையை தடுக்க பெகாசஸ் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஊழலுக்கு பிரதமரே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்.பெகாசஸ் மென்பொருளை ஆயுதமாக இஸ்ரேல் வகைப்படுத்தி உள்ளது. அதனை பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். ஆனால், பிரதமரும், உள்துறை அமைச்சரும் , இந்திய மாநிலங்கள் மற்றும் அரசியல் அமைப்புக்கு எதிராக பயன்படுத்தி உள்ளனர். அரசியல் ரீதியாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகாவில், பிரச்னையை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்திற்கு எதிராகவும், நாட்டின் அனைத்து அரசியல் அமைப்பிற்கு எதிராகவும் பயன்படுத்தி உள்ளனர். இதற்கு சரியான ஒரே வார்த்தை தேசதுரோகம். வேறு வார்த்தை இல்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

11 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

11 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

11 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

11 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

11 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

11 months ago