முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதிக்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு..!!

சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது அவரது பெயரிலும், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அதை ஒருமாத காலம் ஆய்வு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த சொத்துகுவிப்பு வழக்கின் அடிப்படையில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். குறிப்பாக கரூரில் அவருக்கு சொந்தமான வீடுகள், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றன.

Related Post

சென்னையை பொறுத்தவரை அவர் தங்கியிருக்கும் ராஜா அண்ணாமலைபுர வீட்டிலும், உதவியாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 26 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 25 லட்சம் பணமும், முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு முதலீடுகள் குறித்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வங்கி லாக்கர்களை சோதிக்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்திருக்கிறது. அவர் அமைச்சராக இருந்த போது எவ்வாறெல்லாம் பணத்தை வங்கிகளில் மாற்றி இருக்கிறார் என்பது குறித்து சோதனை செய்ய முடிவு செய்து எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள வங்கி லாக்கரில் சோதனையிட லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago