மீனாட்சியம்மன் கோயிலில் அதிகாரிகள்…முகக்கவச விளம்பரம்… அமைச்சர் vs எம்.எல்.ஏ.! கழுகார் அப்டேட்ஸ்

ஆலோசனை விவகாரம்… ஐ.ஏ.எஸ்-களுக்குள் போட்டி!

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இது பொற்காலம். ஜெயலலிதா ஆட்சியில் எந்த முடிவும் எடுக்க முடியாது, ஆலோசனையும் சொல்ல முடியாது என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் புலம்புவார்கள். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்கிறார். அவற்றைச் செயல்படுத்த உடனுக்குடன் ஒப்புதல் தருகிறார். இதுதான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் கொண்டாட்டத்துக்குக் காரணம். இதிலும் ஐந்தாண்டுகளுக்கும் மேலாகப் பசையுள்ள பதவிகளில் நீடிக்கும் சில அதிகாரிகள் அதீத உற்சாகத்தில் இருக்கின்றனர்.

‘கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க மண்டல அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்’ என சமீபத்தில் அதிகாரிகள் சொன்னபோது, உடனே அதைச் செயல்படுத்த உத்தரவிட்டிருக்கிறார் எடப்பாடி.
ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கைத் தளர்த்த மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால், ”தமிழ்நாட்டில் அதைத் தளர்த்தக் கூடாது” என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதையும் முதல்வர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இதில் ‘என் ஆலோசனையைத்தான் முதல்வர் தட்டாமல் கேட்கிறார்’ என்று மாறிமாறி பெருமை பேசிக்கொள்கிறார்களாம் மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.

மாமூலில் கொழிக்கும் அதிகாரி!

சென்னை வடக்கில் கூடுதல் பொறுப்பில் இருக்கும் ஓர் அதிகாரிமீது புகார்கள் குவிகின்றன. ஒருகாலத்தில் நேர்மையாக இருந்த அந்த அதிகாரி இப்போது மணல் கடத்தல், சட்டவிரோத மது விற்பனை உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரிடம் மாமூல் வாங்கிக் குவிக்கிறாராம். தனக்கு ஒத்துழைக்காத நேர்மையான போலீஸ் அதிகாரிகளைத் தூக்கி அடிக்கிறாராம்.

சில நாள்களுக்கு முன்பு மணல் லாரி ஒன்றை இன்ஸ்பெக்டர் ஒருவர் பிடித்திருக்கிறார். அந்த லாரி டிரைவர், இந்த உயரதிகாரியின் பெயரைச் சொல்லியிருக்கிறார். அதை நம்பாத இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்து, வண்டியைப் பறிமுதல் செய்திருக்கிறார். அந்த இன்ஸ்பெக்டரை உண்டு இல்லையென்று பண்ணிவிட்டாராம் அந்த அதிகாரி. குட்கா வழக்கில் இந்த அதிகாரியும் சிக்கியிருக்கிறார். அதிலிருந்து மீள்வதற்கு நிறையச் செலவு செய்ய வேண்டுமென்றுதான் இப்படி இறங்கிவிட்டதாகச் சொல்கின்றனர்

ரேபிட் கிட் விலை, ஸ்டாலின் அரசியல், மத்திய அரசு நிதி… என்ன சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்?

ஸ்பான்சர் மிரட்டல்!

இப்போது தமிழகக் காவல்துறையில் ஸ்பான்சர் மிரட்டல், ஸ்பான்சர் பிச்சை என்ற வார்த்தைகள் மிகவும் பிரபலம். கொரோனா ஊரடங்கின்போது வருவாய்க்கு வாய்ப்பில்லாத போலீஸ் அதிகாரிகள் பலரும், ஏழைகளுக்கு உதவுவதற்கு ஸ்பான்சர் கொடுங்கள் என்று தாறுமாறாக வசூல் செய்கின்றனராம். பெயருக்குக் கொஞ்சம் கொடுத்துவிட்டு மிச்சத்தைச் சுருட்டிக்கொள்கிறார்களாம். இதற்குத்தான் ஸ்பான்சர் மிரட்டல், ஸ்பான்சர் பிச்சை என்று விதவிதமாய் பெயர் சொல்கிறார்கள் போலீஸார்.

இந்த ஸ்பான்சர் மிரட்டல் பற்றி உள்துறைச் செயலாளர் பிரபாகருக்குப் புகார் போயிருக்கிறது. இதையடுத்து, தமிழகம் முழுக்கக் காவல்துறை சார்பில் எங்கெங்கே உணவு விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது, வேறு என்னென்ன உதவிகள் செய்யப்பட்டன, அவற்றுக்குச் செலவிட்டது யார் என்று விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறதாம் உள்துறை. இவர்களில் பலர், நிஜமாகவே ஏழைகள் பலருக்கு உதவி செய்திருக்கின்றனர். இதையும் கொச்சையாகப் பேசி விடுவார்களோ என்று நொந்து கிடக்கிறார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.

அரசாங்கமே பரவாயில்லை,1008 ரூல்ஸ்… அசோசியேஷன்களால் அவதிக்குள்ளாகும் அப்பார்ட்மென்ட் வாசிகள்!

தடையை மீறி தரிசனம்!

சாதாரண நாள்களிலேயே மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உண்டு. ஊரடங்கு நேரத்தில் கோயிலுக்குள் சென்று வழிபட யாருக்கும் அனுமதி இல்லை. ஆனால், போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார். இதேபோல அரசு வழக்கறிஞர் ஒருவரும் குடும்பத்துடன் கோயிலில் வழிபட்டுச் சென்றதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோயில் அதிகாரிகள் தடுத்தும் இந்த அதிகாரிகள் கேட்கவில்லையாம்.

கோவை மக்கள் விரும்பும் எளிமை!

கொரோனா பாதிப்பில் ஸ்கோர் செய்வது யார் என்று கோவையில் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கின்றன. ‘நாங்கள்தான் சிறப்பாகப் பணி செய்துகொண்டிருக்கிறோம், அவர்களைக் களத்திலேயே பார்க்க முடிவதில்லை’ என்று தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றன. இரண்டு கட்சியினருமே தாங்கள் செய்யும் உதவிகளை உடனடியாக சமூக வலைதளங்களில் பதிவாகப் போடுகின்றனர். ஆனால், தன்னுடைய எளிய அணுகுமுறையாலும் இயல்பான பேச்சாலும் உரிய நேரத்தில் செய்யும் உதவிகளாலும் மக்களிடத்தில் அப்ளாஸை அள்ளிக்கொண்டிருக்கிறார் கோவை கலெக்டர் இராசாமணி.

“உங்க பூசாரித்தனமும் வேண்டாம்…. பொங்கச் சோறும் வேண்டாம்!”- கடுகடுத்த நாராயணசாமி

Related Post

சுற்றுலா மற்றும் மது விற்பனைதான் புதுச்சேரி அரசின் பிரதான வருவாய். ஊரடங்கு காலத்தில் இந்த இரண்டு வருவாயும் நின்றுவிட்டது. கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மத்திய அரசிடம் கேட்டிருந்த 995 கோடி ரூபாய் நிதி வராததால் அப்செட்டில் இருக்கிறார் முதல்வர் நாராயணசாமி. இப்படியான சூழலில் மதுக்கடைகள் நடத்தும் அரசியல்வாதிகள், “சமூக இடைவெளியுடன் மதுக் கடைகளைத் திறந்தால் நிதி நெருக்கடியைச் சமாளிக்கலாம். மத்திய அரசை நம்பியிருக்க வேண்டாம்” என்று நாராயணசாமிக்கு ஆலோசனை சொல்லியிருக்கின்றனர். “நீங்கள் கல்லா கட்ட நிதி நெருக்கடியைக் காரணம் காட்டுகிறீர்களா… உங்கள் பொங்கச் சோறும் வேண்டாம்; பூசாரித்தனமும் வேண்டாம்” என்று கடுகடுத்திருக்கிறார் நாராயணசாமி.

அமைச்சருடன் மோதும் எம்.எல்.ஏ!

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பெருந்துறை எம்.எல்.ஏ-வான தோப்பு வெங்கடாசலம் மருத்துவமனை பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. ஆனால், அமைச்சர் கருப்பணன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு கவச உடைகள் போன்ற நலத் திட்டங்களை வழங்கியிருக்கிறார்.

இதனால் கொதித்துப்போன தோப்பு வெங்கடாச்சலம். “கருப்பணனுக்கு இங்கே என்ன வேலை? தேவையில்லாத அரசியல் செய்தால் சும்மா இருக்க மாட்டேன். கொரோனா காலத்தில் தெருவில் இறங்கி மக்களுக்குச் சேவை செய்து கொண்டிருக்கிறேன். யாரோ ஸ்பான்சராக கொடுத்ததைத் தூக்கிக்கொண்டுபோய் நிவாரணம் கொடுக்குறேன்னு போஸ் கொடுக்கிறார்” என்று கோபப்பட்டிருக்கிறார்.

கொரோனா சம்பந்தமான நீதிமன்றங்களில் பதியப்பட்ட சில வழக்குகளும்… அதன் தீர்ப்புகளும்!

கள்ளச்சாராயம்… காவலர்களை காய்ச்சிய காமினி!

ஊரடங்கு காலத்தில் தமிழகத்தின் பல இடங்களில் கள்ளச்சாராய விற்பனைகளை கட்டிக்கொண்டிருக்கிறது. அதிலும் வேலூர் மாவட்டத்தில் இது மிக அதிகம். “குடியாத்தம் மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில் சாராயம் காய்ச்சப்படுகிறது. அணைக்கட்டு சுற்றுவட்டாரத்தில் நாட்டுத் துப்பாக்கி சகிதம் சாராயம் காய்ச்சுகின்றனர். அமிர்தி வனப்பகுதியில் மலையிலிருந்து கயிறு மூலம் சாராயத்தை இறக்கி விற்பனை செய்கிறார்கள். இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் போலீஸார் மாமூல் வசூலிக்கின்றனர்’ என்று கோட்டைக்கு ரிப்போர்ட் அனுப்பியது உளவுத்துறை.

இதையடுத்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் காவல்துறையினரைக் காய்ச்சி எடுத்திருக்கிறார் வேலூர் சரக டி.ஐ.ஜி-யான காமினி. சில போலீஸாரை சஸ்பெண்ட் செய்தும், சில போலீஸ் அதிகாரிகளை டிரான்ஸ்ஃபர் செய்தும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இவை எல்லாவற்றையும்விட, ”கள்ளச்சாராய வியாபாரிகளிடம் யாரேனும் மாமூல் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தெரியவந்தால் எஃப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன்” என்று மூன்று டி.எஸ்.பி-க்களை அழைத்து எச்சரித்துள்ளார். இதுதான் வேலூர் காவல்துறையினரைக் கலங்க வைத்திருக்கிறது.

உணவு கொடுக்கும் ஓ.பி.எஸ்.!

தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்குச் சரியான உணவு வழங்கவில்லை என்பதை விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டோம். இதனையடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி கலெக்டரை தொடர்புகொண்டு “கொரோனா சிகிச்சைக்கு வருபவர்களுக்குத் தேவையான உணவு வழங்க நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று சொன்னதுடன் அன்றிலிருந்து உணவு வழங்கவும் ஏற்பாடு செய்துவிட்டார்.ஓ.பி.எஸ் நெருங்கிய வட்டத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது அந்த ஹோட்டல் உரிமையாளரை போனில் அழைத்து “இன்று என்ன மெனு?” என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறாராம் ஓ.பி.எஸ்.

முகக் கவசத்தில் விளம்பரம்!

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி-யான வசந்தகுமார் ஒரு லட்சம் முகக்கவசங்களைக் கட்சிக்காரர்கள்மூலம் மக்களுக்கு வழங்கியிருக்கிறார். முகக்கவசங்களில் வசந்தகுமாரின் கடை விளம்பரம் பொறிக்கப்பட்டிருந்தது. “மாஸ்க்கில் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் என்றோ அல்லது எம்.பி பெயரையோ போட்டிருக்கலாம். இப்படி கடைப் பெயரைப் போடுவதாயிருந்தால் கடை ஊழியர்களை வைத்து முகக்கவசங்களை விநியோகித்து இருக்கலாம். கட்சிக்காரர்கள்மூலம் கடைக்கு விளம்பரப்படுத்துவது சரியா?” எனப் புலம்புகிறார்கள் குமரி கதர்ச்சட்டைக்காரர்கள்.

வெளியே வரமுடியாத மணிகண்டன்… வில்லங்கமாகச் சிரிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!

ராமநாதபுரம் எம்.எல்.ஏ மணிகண்டன், அமைச்சராகக் கோலோச்சிய காலத்தில் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் எதுவானாலும் தனது தலைமையிலோ அல்லது தன்னிடம் அனுமதி பெற்றோதான் நடத்த வேண்டும் என்பதை எழுதப்படாத சட்டமாக்கி வைத்திருந்தார். அமைச்சர் பதவி பறிபோன பின் அந்த நிலை தலைகீழாக மாறியது. தனது தொகுதிக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டும் எம்.எல்.ஏ என்ற முறையில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார்.

இந்நிலையில் கொரானோ நோயாளி ஒருவரின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஆகையால், அவர் வீட்டைவிட்டு வெளியில் வருவதில்லை. இந்தநிலையில், கொரானோ பாதிப்பிற்காகத் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து மாவட்ட மருத்துவமனையில் கூடுதல் ஆய்வகம் அமைக்கவும், ராமேஸ்வரம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் 25 லட்சம் ரூபாய்க்கான அனுமதி கடிதத்தைத் தன் சகோதரரின் மனைவி மூலம் கலெக்டரிடம் வழங்கினார். மாரியம்மன் கோயிலில் கூழ் ஊற்ற வேண்டும் என்றால் கூட தன்னுடைய முன்னிலையிலேயே ஊற்ற வேண்டும் என அடம் பிடிக்கும் மணிகண்டன், தனது தொகுதி நிதியைக் கூட நேரடியாகக் கொடுக்க முடியாத நிலையைக் கொரோனா ஏற்படுத்திவிட்டது என்று வில்லங்கமாகச் சிரிக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து ஓராண்டு… வழக்கு விசாரணை எந்த நிலையில் இருக்கிறது?

Share
Tags: vikatan

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

3 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

3 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

3 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

3 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

3 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

3 hours ago