பீமா கோரேகான் வழக்கும் ஆனந்த் டெல்டும்டே கைதும்: துக்க நாளாக மாறிய அம்பேத்கர் பிறந்தநாள்!

இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்தவரும் சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் அம்பேத்கரின் 129-வது பிறந்த நாள் ஏப்ரல் 14-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என எல்லோரும் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மரியாதை செய்த பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி என்றுமே உரிய மரியாதையை அளித்ததில்லை.
ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றிவருகிறது” என்று பெருமையுடன் கூறினார். ஆனால், `அம்பேத்கர் கண்ட கனவு எது? தன் பிறந்த நாளில் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட வேண்டும், சிறை செல்ல வேண்டும் என்பதுதான் அம்பேத்கர் கண்ட கனவு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’ என்று மத்திய ஆட்சியாளர்களைப் பார்த்து கொந்தளிக்கிறார்கள் ஒரு சாரர்.

இழைக்கப்பட்ட அநீதிகள்; மறுக்கப்பட்ட உரிமைகள் தாண்டி ஆளுமையாய் மாறிய அம்பேத்கர்! #AmbedkarJayanti

Related Post

நாடு முழுவதும் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தப்பட்ட நேரத்தில், அம்பேத்கரின் வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. பேரன் பிரகாஷ் அம்பேத்கர், பேத்தி ரமா உள்ளிட்ட அம்பேத்கரின் குடும்பத்தினர் மும்பையில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அலுவலகம் முன்பாக பெரும் சோகத்துடன் நின்றனர். அம்பேத்கரின் பேத்தி ரமாவின் கணவரும் புகழ்பெற்ற அம்பேத்கரிய சிந்தனையாளரும் ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் நிறுவனங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவரும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டேவின் கைதுதான் அவர்களின் சோகத்துக்குக் காரணம். 2018-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பீகா கோரேகான் என்ற இடத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு ஆனந்த் டெல்டும்டேவின் பேச்சுதான் காரணம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் என்.ஐ.ஏ-வால் ஆனந்த் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அம்பேத்கர் குடும்பத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டிருப்பது அம்பேத்கரியவாதிகள், ஜனநாயக சிந்தனையாளர்கள், முற்போக்காளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்த் டெல்டும்டேவுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்தது. அதனால், ஏப்ரல் 14-ம் தேதி மும்பையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் அவர் சரணடையப்போகிறார் என்று செய்திகள் பரபரப்பைக் கிளப்பின. #DontArrestAnand என்ற ஹேஷ்டாக் சமூகவலைதளங்களில் டிரெண்டானது. ஏப்ரல் 14-ம் தேதி மும்பையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆனந்த் டெல்டும்டே சரணடைந்தார். பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டார்.

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Share
Tags: vikatan

Recent Posts

பிரபல நாட்டிற்கு சென்றுள்ள மந்திரி. துணை பிரதமருடன் முக்கிய சந்திப்பு. வெளியான பரபரப்பு தகவல்..!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை…

8 mins ago

கொரோனாவால் அதிகமான தீவிரவாதம்.. அறிக்கை விடுத்த உள்நாட்டு உளவுத்துறை அமைச்சர்..!!

கொரோனா நேரத்தில், தீவிரவாத எண்ணங்கள் அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்று ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.கொரோனா…

8 mins ago

இந்தோனேசியா : தடுப்பூசி போட்டுக் கொள்ள வாங்க… கோழியுடன் போங்க.!

இந்தோனேசியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு, இலவசமாக கோழி வழங்கப்படுகிறது. CIPANAS பகுதியிலுள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம்…

8 mins ago

அமெரிக்க அதிபர் பைடன் – ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு

www.patrikai.com Tamil news websitePulses PRO Tamil news websiteSign in / Joinwww.patrikai.com Tamil news websitetype here...…

9 mins ago

குல்பூஷனுக்கு வக்கீல் நியமனம் வழக்கு 4 மாதம் ஒத்திவைப்பு: பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்: இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் தொழில்ரீதியாக ஈரான் சென்றபோது பாகிஸ்தான் உளவு படையால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில்…

9 mins ago