தமிழக அரசின் தடையால் பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும்! -ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

கரோனாவை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டிருக்கும் சூழலில், வாழ்வாதாரங்களை இழந்துள்ள மக்களின் அத்யாவசிய தேவைகளை நிறைவேற்றும் அரசியல்கட்சிகளின் சேவைகளுக்கு திடீரென தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு!

இந்த தடை உத்தரவை கண்டித்துள்ள மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, ”கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என காரணம் சொல்லி, நிவாரண பொருட்களை விநியோகம் செய்யும் அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இச்சேவையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது ஏற்கக் கூடியதல்ல! ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கிய மக்களில் அன்றாடம் உழைத்தால் தான் உணவு என்ற நிலையில் வாழும் உழைப்பாளிகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளும் அடங்குவர்.
இவர்களுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் செய்யும் உதவியைத் தவிர வேறு உதவியில்லை.

Related Post

இவர்களுக்கான மருந்து பொருட்களும், உணவுப் பொருட்களையும் அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் விநியோகிக்கவில்லை எனில் அவர்களின் வாழ்வு கேள்வி குறியாகிவிடும். அரசு இயந்திரத்தை மட்டும் வைத்து தமிழகத்தில் உள்ள அனைவரின் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்வது இயலாத காரியம். இது பட்டினிச் சாவிற்கு வழிவகுத்து விடும்.

அனைத்து தரப்பினரும் இணைந்து கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்கிற நிலையில், அரசியல் மாச்சரியங்களால் தமிழக அரசு இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளதோ என்கிற சந்தேகம் எழுகிறது. எனவே, தமிழக அரசு இந்த அசாதாரண சூழ்நிலையிலும் அரசியல் மாச்சரியங்களைத் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் உதவிகளை உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பொதுமக்கள் பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். நிவாரண உதவிகளுக்கு பிறப்பித்துள்ள தடை உத்தரவைத் தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும்” என்கிறார் ஜவாஹிருல்லா.

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

4 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

4 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

4 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

4 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

4 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

4 hours ago