ஏர் இந்தியா, ரயில்வேயை விற்கின்றனர்: விட்டால் தாஜ்மகாலையும், செங்கோட்டையையும் விற்றுவிடுவார்கள்…மத்திய அரசை தாக்கிய ராகுல் காந்தி

டெல்லி: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் சனிக்கிழமை அன்று தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஆம் ஆத்மியும், தலைநகரை கைப்பற்ற பாஜகவும், காங்கிரசும் முழு முனைப்பில் களம் கண்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் கட்சி தலைவரும் வயநாடு எம்.பியுமான ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் ஜாங்பூராவில் நடைபெற்ற தேர்தலி பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும், மத்தியில் ஆளும் பாஜக கட்சியும் எதையும் செய்யவில்லை.
ஆனால் மார்க்கெட்டிங் செய்கின்றனர் என்று குற்றம்சாட்டினார். மேலும், தங்கள் மார்க்கெட்டிங்-காக மக்களின் பணத்தை பயன்படுத்துகின்றனர். 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால், ஆட்சிக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், வேலைவாய்ப்பு எதையும் உருவாக்கவில்லை என்றும் கூறினார். வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டால், அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். நான் புள்ளி விவரங்களை தெரிவித்தால், ராகுல் கேள்வி கேட்பார். இதற்கு, எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து பதிலளிக்க நிதி அமைச்சர் மறுத்துவிட்டார் என்பதே அர்த்தம் என்றார். மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 மணி நேரம் வாசித்தார். ஆனால், வேலைவாய்ப்பின்மையை சரி செய்ய எந்த தீர்வையும் அவர் சொல்லவில்லை. விவசாயிகளுக்கு எந்த திட்டமும் இல்லை. வெற்று அறிக்கையாக மட்டுமே இருந்தது. மேக் இன் இந்தியா என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், ஒரு தொழிற்சாலை கூட அமைக்கப்படவில்லை. இந்தியன் ஆயில், ஏர் இந்தியா, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ரயில்வேயும் விற்கின்றனர். செங்கோட்டையையும் ஏன் தாஜ்மஹாலையும் கூட விற்பார்கள் என்றும் தெரிவித்தார்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago