Categories: இந்தியா

நாளை நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

கஜா புயல் காரணமாக நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. குறிப்பாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலும் முடங்கியது. கஜா புயலுக்கு இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சை, திண்டுக்கல், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 493 நிவாரண முகாம்களில் 2,49,083 பேர் உள்ளனர். கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் 1.12 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. வேதாரண்யத்தில் மட்டும் 4 லட்சம் தென்னை மரங்கள் உட்பட 27.50 லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளன என தமிழக அரசு முதல்கட்டமாக தெரிவித்தது.

இதனால் அங்குள்ள பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உண்ண உணவு, உடுக்க உடை, தங்க இடம் கூட இல்லாமல் தவித்து வருகின்றார். தமிழக அரசும் போதிய நிவாரணம் வழங்கவில்லை. அரசின் நிவாரணம் மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை என மக்கள் புகார் எழுப்புகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு, சமூக நல அமைப்புகளும், இளைஞர்களும் தானாக முன் வந்து, டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத காரணத்தாலும், வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா பகுதியில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தாலும், நாளை நடைபெற இருந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Post

இது தொடர்பாக பல்கலைக்கழக தேர்வு செயலாளர் கூறியபோது, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை முதல் நவம்பர் 24ம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் நவம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago