Categories
Featured இந்தியா

உட்கார்ந்த இடத்திலிருந்தே பாஸ்போர்ட் பெற ‘பாஸ்போர்ட் சேவா’ செயலி அறிமுகம்

டெல்லி: மக்கள் எளிமையாக பாஸ்போர்ட் பெற ‘பாஸ்போர்ட் சேவா’ என்ற புதிய செயலியை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் அறிமுகம் செய்துள்ளார். பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே வெளிநாட்டுக்கு செல்ல முடியும். தற்போதைய சூழலில் வெளிநாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இவற்றில் வேலைக்காக வெளிநாடு செல்பவர்களை விட சுற்றுலாவுக்காக செல்பவர்களே அதிகம். இதனால் பாஸ்போர்ட் எடுப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகமானது. பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒருமதமாவது ஆகும். இதனை பொருட்டில் கொண்டு பாஸ்போர்ட் எடுக்கும் முறையை மத்திய அரசு எளிமையாக்கியுள்ளது. அதாவது டிஜிட்டல் முறையில் கொண்டுவந்துள்ளது.
நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கைபேசி மூலம் விண்ணப்பிக்கும் ‘பாஸ்போர்ட் சேவா’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் குறிப்பிடும் முகவரியில் போலீஸ் துறையின் சரிபார்ப்பு முடிந்த பின்னர் தபால் மூலம் பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த புதிய முறையின் மூலம் பாஸ்போர்ட் பெறும் நடைமுறைகள் மிக துரிதமாகவும், சுலபமாகவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் திருமணமான பெண்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க திருமண சான்றிதழ் தேவையில்லை எனவும் விவாகரத்து பெற்ற பெண்கள் முன்னாள் கணவர் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியமும் இல்லை என்றும் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply