Categories
இந்தியா

மணிப்பூர் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெரும்பான்மையை நிரூபிக்குமா பாஜக அரசு?

இம்பால்: மணிப்பூர் சட்டசபையில் இன்று பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறது.

மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களையும், பாஜக 21 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சியமைக்க 31 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்று இருந்த நிலையில், தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததால், பாஜகவின் பலம் 33 ஆக அதிகரித்தது.

பாஜகவின், பிரேன் சிங் சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு முதல்வராக பதவியேற்றார். சட்டசபையில் பலத்தை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தங்களது 28 உறுப்பினர்களை இம்பாலில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் வீட்டில் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் பாஜக தங்களது கட்சியைச் சேர்ந்த 17 உறுப்பினர்களை கவுகாத்தியில் உள்ள உணவகத்தில் தங்க வைத்துள்ளது.

இரு கட்சிகளுமே தங்களுக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: tamil.oneindia.com

source: oneindia.com

Leave a Reply