Categories: இந்தியா

கலிக்கோ புல் தற்கொலை வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தற்கொலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல்வரானார் கலிக்கோபுல். இந்த ஆட்சி மாற்றம் செல்லாது என உச்சநீதிமன்றம் கடந்தாண்டு ஜூலை மாதம் அளித்த தீர்ப்பால் முதல்வர் பதவியில் இருந்து கலிக்கோபுல் விலகினார். இந்நிலையில் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி தலைநகர் இட்டாநகரில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தற்கொலை செய்து ெகாண்டார். இந்த நிலையில் வக்கீல் எம்.எல் சர்மா என்பவர் கலிக்கோ புல் தற்கொலை வழக்கை அவசர வழக்காக எடுத்து தனிப்பட்ட விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி கேஹர் மற்றும் சந்திரசூட், கவுல் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என தெரிவித்தனர். கலிக்கோபுல் சடலம் அருகே 60 பக்க தற்கொலைக்கான காரணம் குறித்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இதில் பல அரசியல்தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மீது குற்றம் சுமத்தியிருந்தார்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago