Categories: இந்தியா

அடிப்படை தேவைகளை நிறைவேற்ற திட்டங்களை உருவாக்க வேண்டும்; அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு

புதுச்சேரி : ‘புதுச்சேரியை நல்ல முறையில் உருவாக்கி, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்’ என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.புதுச்சேரி உள்ளாட்சி துறை, பிரெஞ்சு துாதரகம், பிரெஞ்சு வளர்ச்சி முகமை ஆகியவை இணைந்து, புதுச்சேரியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான கருத்தரங்கை ஆனந்தா இன் ஓட்டலில் நேற்று நடத்தின.இக்கருத்தரங்கில், உள்ளாட்சி துறை செயலர் ஜவஹர் வரவேற்றார். முதல்வர் நாராயணசாமி கருத்தரங்கை தொடங்கி வைத்து, பேசினார்.உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி பேசும்போது, ‘அனைத்து வசதிகளும் இருந்த புதுச்சேரி நகரத்தில் தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் வசதிகள் போதவில்லை.
மீண்டும் புதுச்சேரியை நல்ல முறையில் உருவாக்கி, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டும்’ என்றார்.பிரெஞ்சு துாதரக தெற்காசியாவிற்கான பொருளாதார துறை மண்டல தலைவர் ஜீன்மார்க் பெனே பேசுகையில், ‘புதுச்சேரியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற 16 பிரெஞ்சு நிறுவனங்கள் பங்களிக்க முன்வந்துள்ளன.தற்போது இந்தியாவில் செயல்படும் ஸ்மார்ட் சிட்டி கிளப்பில் 67 பிரெஞ்சு நிறுவனங்கள் உள்ளன. புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த பிரெஞ்சு நிறுவனங்களுக்கு நிபுணத்துவம் உள்ளது. அவர்கள் போக்குவரத்து, குடிநீர் வசதி, குப்பை மேலாண்மை போன்றவற்றில் அதிகம் நிபுணத்துவம் பெற்றுள்ளனர்’ என்றார்.இக்கருத்தரங்கில், புதுச்சேரியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப் பட்டது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்த ஆர்வம் தெரிவித்துள்ள 16 பிரெஞ்சு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தலைமைச்செயலர் மனோஜ் பரிதா, புதுச்சேரிக்கான பிரெஞ்சு துணைத் துாதர் பிலிப் ஜான்வியர் கமியாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago