Categories: இந்தியா

நீதிபதிகள் மீதான ஊழல் புகாரை விசாரிக்க கோரிய கலிக்கோ புல் மனைவியின் வேண்டுகோளை ஏற்ற உச்சநீதிமன்றம்!

டெல்லி: அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தற்கொலை மற்றும் மரண வாக்குமூலம் மீது நடவடிக்கை எடுக்க கோரிய அவரது மனைவி டாங்விம்சாய் புல் கோரிக்கையை ஏற்று இன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.

அருணாசலப் பிரதேசத்தில் நபம் துகி தலைமையில் காங்கிரஸ் அரசு நடைபெற்று வந்தது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கலிக்கோ புல் தலைமையில் கடந்த ஆண்டு போர்க்கொடி தூக்கினர். பின்னர் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் கலிக்கோ புல் முதல்வரானார்.

இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 6 மாதங்கள் நடைபெற்ற வழக்கின் இறுதியில் கலிக்கோ புல் அரசு நீக்கப்பட்டு மீண்டும் காங்கிரஸ் அரசு அமைக்கப்பட்டது. புதிய முதல்வராக பெமா காண்டு பதவியேற்றார்.

Source: tamil.oneindia.com

இதனிடையே பதவி பறிபோன விரக்தியில் கலிக்கோ புல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Post

கலிக்கோபுல் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவரது முதல் மனைவி டாங்விம்சாய் புல் வலியுறுத்தி வந்தார். ஆனால் அருணாச்சல பிரதேச அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹருக்கு டாங்விம்சாய் புல் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் கலிக்கோபுல் தம்முடைய மரண வாக்குமூலமாக 60 பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலரது முறைகேடுகள் தொடர்பாக கலிக்கோ புல் விவரித்துள்ளார். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தம்முடைய கடிதத்தையே மனுவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என டாங்விம்சாய் புல் வலியுறுத்தி இருந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி கேஹர், நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் யு.யு. லலித் பெஞ்ச் இன்று இந்த மனு மீது விசாரணை நடத்தும் என உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த முடிவு தமக்கு திருப்தி தருவதாக டாங்விம்சாய் புல் கூறியுள்ளார்.

Share
Tags: oneindia

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago