இந்தியாவிலிருந்து கல்வி பயில வரும் மாணவர்களுக்கான நுழைவு இசைவு (விசா) எண்ணிக்கையில் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற “பெண்களின் பொருளாதார அதிகார மேம்பாடு’ குறித்த ஐ.நா. அறிக்கை வெளியீட்டு விழாவில் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் டொமினிக் ஆஸ்கித் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: இந்தியா மட்டுமன்றி, உலகின் எந்த நாட்டிலிருந்தும் மாணவர்கள் வருவதற்கான விசா எண்ணிக்கையில் பிரிட்டன் உச்ச வரம்பு நிர்ணயிக்கவில்லை. யார் வேண்டுமானாலும் பிரிட்டன் வந்து, அங்கு ஏற்கெனவே உள்ள சுமார் 50 லட்சம் சர்வதேச மாணவர்களுடன் இணைந்து உலகத் தரம் வாய்ந்த கல்வியைப் பெறலாம்.
இதற்காக, உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் பிரிட்டனில் நிறைந்துள்ளன. மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகளிலும் பிரிட்டன் பங்கு கொண்டு வருகிறது. பிரிட்டன் நிறுவனங்கள் தங்களது வருமானத்தில் சராசரியாக 7 சதவீதத்தை இந்தியாவிலுள்ள பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்காக செலவிட்டு வருவதுடன், பெண்களுக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன என்றார் அவர். கல்வி பயில்வதற்காக பிரிட்டன் செல்லும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும் என்று பிரிட்டன் அண்மையில் தனது விதிமுறைகளைக் கடுமையாக்கியது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து பிரிட்டன் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையத் தொடங்கியது. விசா கட்டுப்பாடுகளைக் குறைக்குமாறு இந்தியா கூறி வரும் நிலையில், இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…
டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…
துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…
டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…
திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…
கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…