Categories: இந்தியா

அருணாச்சல் முன்னாள் முதல்வரின் தற்கொலை கடிதத்தில் அரசியல் குடும்பத்தினர் கடும் கண்டனம்

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தி, சில எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கலிக்கோ புல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வராக பதவியேற்றார். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கலிக்கோ புல் ஆட்சி பிடித்தது முறைகேடானது என்று உச்ச நீதிமன்றம் அந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தீர்ப்பளித்தது. இதனால் அவர் பதவி இழந்தார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கலிக்கோ புல் கடும் மனஉளைச்சலில் இருந்தார். ஆகஸ்டு மாதத்தில் திடீரென தற்கொலை செய்து ெகாண்டார். ‘எனது வருத்தம்’ என்ற தலைப்பில் தற்கொலைக்கான காரணத்தை 60 பக்கத்தில் அவர் எழுதி வைத்து இருந்தார். இந்த நிலையில், கலிக்கோ புல் தற்கொலையை சிபிஐ விசாரணை செய்ய வேண்டி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தங்களது போராட்டத்துக்கு நன்கொடை அளிக்கும்படி பொதுமக்களிடம் அந்த குழு நிதி வசூலித்து வருகிறது. இது போன்ற நடவடிக்கைகளுக்கு கலிக்கோ புல் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சகோதரர் பஜாஜ் புல் உள்ளிட்ட கலிக்கோ புல்லின் குடும்பத்தினர் இது தொடர்பாக கூறியதாவது: கலிக்ேகா புல்லின் தற்கொலை கடிதத்தை ஒரு சிலர் தங்களது அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்துவது துரதிருஷ்டவசமான மற்றும் வேதனைக்குரியது. அந்த குழுவுக்கு, மக்கள் யாரும் நன்கொடை அளிக்க வேண்டாம் என்ற கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago