Categories: இந்தியா

தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் தாக்கப்பட்டது ஜனநாயக படுகொலை

புதுச்சேரி: தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டது மிகவும் வேதனைக்குரியது, ஜனநாயகப் படுகொலை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: கடந்த 18ம்தேதி தமிழக சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியில் பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமியும் அமைதியான சூழ்நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சுதந்திரமாக வாக்களிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், இல்லையென்றால் அவையை ஒத்தி வைக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியே தூக்கி அனுப்பியது மட்டுமல்லாமல், அநாகரிக முறையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது. இது ஜனநாயக படுகொலை ஆகும். எதிர்க்கட்சிகளை எல்லாம் வெளியில் அனுப்பிவிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவரே தாக்கப்படுவது மட்டுமல்லாமல் ஜனநாயக உரிமையை நிலைநிறுத்துவதற்கு அனுமதிக்காதது மிகவும் வேதனைக்குரிய விஷயம். குறிப்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தாக்கப்பட்டதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் காதர்மொய்தீன்: தமிழக சட்டமன்றம் அண்ணா, காமராஜர், ராஜாஜி, கருணாநிதி உள்ளிட்ட அறிஞர்கள் விவாதம் செய்த மன்றமாகும். சட்டமன்றம், விவாத மன்றமாக இருக்க வேண்டும், விதண்டாவாதம் செய்யும் மன்றமாக இருக்கக்கூடாது. முதல்வர் அந்தஸ்தில் இருப்பவர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். அவர் சட்டமன்றத்திற்கு வரும்போது அவரின் காரை சோதனை செய்யவேண்டிய அவசியம் என்ன? இது எதிர்க்கட்சி தலைவரை அவமானப்படுத்தும் செயல். பின்னர் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சட்டை கிழிப்பு, எம்எல்ஏக்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது கொடுமையான நிகழ்ச்சி. இது முற்றிலும் ஜனநாயக படுகொலை. கூவத்தூரில் இருந்து எம்எல்ஏக்களை சிறைக் ைகதிபோல் அழைத்து வந்து சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துகின்றனர். வெளிப்படையாக வாக்கெடுப்பு நடந்தால் எம்எல்ஏக்களின் உண்மையான ஆதரவு வெளிப்படாது. எனவே, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இதனை சபாநாயகர் அவருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி செய்திருக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago