Categories: இந்தியா

8ம் தேதி ரிசர்வ் வங்கி நிதி கொள்கை ஆய்வு கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு இல்லை

புதுடெல்லி: பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நாளை மறுநாள் நடைபெறும் ரிசர்வ் வங்கி நிதி கொள்கை ஆய்வுக் கூட்டத்தில், வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை ஆய்வு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அதில், முக்கிய கடனுக்கான வட்டி விகிதங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. நாளை மறுநாள் (8ம் தேதி) ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. அப்போது ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் தலைமையிலான 6 பேர் கொண்ட நிதி கொள்கை குழு, கடனுக்கான வட்டி விகிதம் குறித்து முடிவெடுக்கும். பெரும்பாலும், வட்டி விகிதத்தில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை என்றே பல நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உயர் மதிப்பு கரன்சி ரத்து அறிவிப்புக்கு பிறகு வங்கிகளிடம் டெபாசிட் குவிந்து கிடக்கிறது. இதனால், கடந்த ஒரு மாதத்தில் வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி 1 சதவீதம் வரை குறைந்துள்ளது. அடுத்ததாக, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் அவர் வெளியிட்டு வரும் அதிரடி அறிவிப்புகளால் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதனை உறுதிப்படுத்துவதுபோல் மத்திய அரசு அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மானிய செலவு கணக்கில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் சராசரி விலை 65-70 டாலர் (₹4,700) என்ற அளவில் இருக்கும் என்பதை மனதில் வைத்து கணக்கிட்டுள்ளது. சில்லரை விலை பணவீக்கம் தொடர்ந்து 5வது மாதமாக கடந்த டிசம்பரில் அதிகரித்துள்ளது. எனவே வரும் மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் நாளை மறுநாள் நடைபெறும் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 6.25 சதவீதமாக உள்ளது. 2015 ஜனவரி முதல் இதுவரை ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 1.75 சதவீதம் குறைத்துள்ளது. அதேசமயம், ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று சில வங்கிகள் கருத்து தெரிவித்துள்ளன. யூகோ வங்்கி நிர்வாக இயக்குனர் ஆர்கே தாக்கர் கூறுகையில், ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைக்கும் என்றார். பணவீக்கம், நிதிப்பற்றாக்குறை போன்ற பொருளாதாதார காரணிகள் வட்டி குறைப்புக்கு சாதகமாக உள்ளன. எனவே ரிசர்வ் வங்கி வட்டியை 0.25 சதவீதம் குறைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று பேங்க் ஆப் மகாராஷ்டிரா செயல் இயக்குனர் ஆர்கே குப்தா தெரிவித்தார்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago