Categories
இந்தியா

வாகா எல்லையில் பாக்.வீரர்களுக்கு இனிப்பு வழங்கியது பாதுகாப்பு படை

அட்டாரி: இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 68வது குடியரசு தினத்தையொட்டி பாகிஸ்தான் வீரர்களுக்கு எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் இனிப்பு வழங்கினார்கள். நாடு முழுவதும் 68வது குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி எல்லையில் உள்ள அண்டை நாட்டு வீரர்களுக்கு எல்லைப்பாதுகாப்பு படைவீரர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி -வாகா எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் குடியரசு தின விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழந்தனர். இதன் ஒரு பகுதியாக எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு மற்றும் பழங்களை இந்திய வீரர்கள் வழங்கினார்கள்.
இதனைப்பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் ரேஞ்சர் படைப்பிரிவு கமாண்டர் மற்றும் வீரர்கள் இந்திய வீரர்களுடன் கைலுக்கினார்கள்.

Leave a Reply