Categories
இந்தியா

முன்னாள் சபாநாயகர் படுகொலை

காரைக்கால் : முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார் கொலை செய்யப்பட்டு, 9 நாட்கள் கடந்தும் குற்றவாளிகளை நெருங்க முடியாமல், காரைக்கால் போலீசார் திணறி வருகின்றனர்.காரைக்கால் திருப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார். கடந்த 3ம் தேதி நிரவியில் புதிதாக கட்டி வரும் திருமண மண்டபத்தை பார்க்க சென்ற, சிவக்குமாரை மர்ம கும்பல் கொலை செய்தது. கொலையாளியை பிடிக்க போலீசார் 5 தனிப்படை அமைத்துள்ளனர்.துப்பாக்கி சிக்கியதுசிவக்குமார் கொலை செய்யப்பட்டபோது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் வைத்திருந்த கார்பன் ரக துப்பாக்கியை மர்ம கும்பல் பிடுங்கி சென்றது. இந்த துப்பாக்கி வாஞ்சூர் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் சீனியர் எஸ்.பி.,சந்திரன் ஆய்வு செய்தார்.விசாரணைகொலையாளிகளுக்கு உணவு, தங்கும் இடம் கொடுத்தாக நாகப்பட்டினத்தை சேர்ந்த அருண் என்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போலகம் மதுபான கடையில் குண்டு வீசிய நபர்களின் புகைப்படம் கிடைத்துள்ளது.ஆனால், கொலை நடந்து 9 நாட்கள் கடந்தும், இதுவரை கொலையாளிகளை நெருங்க முடியாமல், காரைக்கால் மாவட்ட போலீசார் திணறி வருகின்றனர்.

Leave a Reply