Categories
இந்தியா

திரிபுராவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 4 பேர் காயம்

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7-ஆகப் பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் உண்டான அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “திரிபுராவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7-ஆகப் பதிவாகியது. 1 நிமிடம் வரை நிலநடுக்கம் உணரப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தில் ஏறக்குறைய 30 வீடுகள் சேதமடைந்ததாகவும், மலைகள் நிறைந்த சில மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து, அகர்தலா நகர வாசி ஒருவர் கூறுகையில், “இதுபோன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை நான் இதுவரை கண்டதில்லை. கட்டடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்துவிடும் என்று அஞ்சினோம்’ என்றார்.

Leave a Reply