Categories: இந்தியா

விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு: ஹிந்து மதத்துக்கு ஆபத்து என பா.ஜ.க., குற்றச்சாட்டு

மும்பை: கோவிட் அச்சுறுத்தல் காரணமாக மஹாராஷ்டிரா அரசு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனை கண்டித்துள்ள பா.ஜ.க., எம்.எல்.ஏ., நிதேஷ் ரானே, ஹிந்து மதம் ஆபத்திலிருப்பதாக கூறினார்.நாட்டில் கோவிட் பாதிப்பு அதிகம் கொண்ட மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. மூன்றாம் அலை கோவிட் அச்சுறுத்தல் உள்ள சூழலில் செப்டம்பர் 10 அன்று விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டது. “பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலை 4 அடிக்கு மிகக்கூடாது. வீட்டில் வைக்கப்படும் சிலை 2 அடிக்கு மிகக்கூடாது. கோவிட் சூழலால் பந்தலுக்குள் குறைவான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
திருவிழா இடத்தில் பஜனைகள், கீர்த்தனைகளை தவிர்த்து ரத்த தானம் மற்றும் சமூக விழிப்புணர்வு முகாம்கள் நடத்த அறிவுத்தப்படுகிறார்கள். ஊர்வலம் செல்லக்கூடாது” என கூறப்பட்டிருந்தது.புதிய விதிகள்இதற்கு பா.ஜ.க., எம்.எல்.ஏ., நிதிஷ் ரானே கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ” புதிய விதிகளின் படி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது கடினம். நாங்கள் எங்களுடைய கவலைகளை கவர்னரிடம் வெளிப்படுத்தினோம். சில காலங்களுக்கு முன்பு, மற்ற மத விழாக்கள் கொண்டாடப்பட்டன. அவர்கள் எந்த சிரமத்தையும் சந்திக்கவில்லை. ஹிந்துக்கள் மட்டும் ஏன் சந்திக்க வேண்டும். ஹிந்து மதம் ஆபத்தில் உள்ளது. நாங்கள் எங்கள் விழாவை பாதுகாக்கும்படி கவர்னரிடம் சொன்னோம். இல்லையென்றால் தாக்கரே அரசு படிப்படியாக கொண்டாட்டங்களை முடித்துவிடும்.” என்றார்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago