Categories: இந்தியா

அரசு ஊழியர்களே உஷார்! இதை செய்தால் அரசு வேலை காலி!

நாகரீகம் வளர்ந்த இந்த காலத்திலும் பல இடங்களிலும் இன்னும் பெண் சிசுக்கொலை, வரதட்சணை கொடுமை , பாலியல் அத்துமீறல்கள், வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் விஸ்மயா தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரளாவில் வரதட்சணைக் கொடுமைகள் அதிகளவில் இருந்து வருகின்றன. வரதட்சணையாக அதிக பணம், நகைகளை வாங்குவது அரசுப்பணியாளர்கள் மட்டத்தில் அதிகம் இருப்பது தெரிகிறது.இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கேரள அரசு, அரசுப்பணியில் இருக்கும் ஆண்கள் தங்கள் திருமணத்தின்போது பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை வாங்கவில்லை என்னும் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று முன்னதாக அறிவித்தது.

Related Post

இந்தச் சான்றிதழில் மணமகள், மணமகளின் பெற்றோர் ஆகியோர் கையெழுத்திட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழை திருமணம் முடிந்த மாதத்திலேயே அவர்களது உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்நிலையில் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் விஸ்மயாவின் கணவர் அரசுப்பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து டுவிட்டரில் கேரளா எப்போதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு கண்ணை மூடிக்கொண்டு இருக்காது எனவும், வரதட்சணை கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago