Categories: இந்தியா

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் தங்கம். கடைசி நாளில் சொல்லியடித்த “தங்க மகன்” நீரஜ் சோப்ரா!

ஒலிம்பிக் போட்டி தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க இந்தியாவிற்கு பதக்கங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒலிம்பிக் ஆரம்பித்து முதல் நாளில் பெற்ற வெள்ளி தவிர்த்து இரு வாரங்களாக எந்தப் பதக்கமும் இந்தியா பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இரண்டாவது பதக்கத்தை பி.வி. சிந்து தான் வாங்கி கொடுத்தார். அவர் ஆரம்பித்து வைத்த கணக்கு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்குப் பின் குத்துச்சண்டையில் லவ்லினா, ஆடவர் பிரிவில் இந்திய ஹாக்கி அணி, மல்யுத்தத்தில் ரவிக்குமார் தஹியா என 5 பதக்கங்கள் வந்தன.

இறுதி நாளான இன்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்று கொடுத்து பதக்க கணக்கை ஆறாக உயர்த்தினார்.
தற்போது கடைசி பதக்கம் முத்தான பதக்கமாக கிடைத்திருக்கிறது. சாதித்துக் காட்டியவர் ஈட்டி எறிதல் இளம் வீரர் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதல் போட்டிகளின் தகுதிச்சுற்று கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா களமிறங்கினார். 23 வயது இளம் வீரரான நீரஜ் கலந்துகொண்ட முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தகுதிச்சுற்றில் வெற்றிகண்டு நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் இலக்காக 83.50 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிதல் வேண்டும்.

Confident level #NeerajChopra pic.twitter.com/1RceLi5jmQ

Related Post

முதல் முயற்சியிலேயே வேகமாக ஓடிவந்து எறிந்த நீரஜ் இதனை பீட் செய்து 86.65 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார். அப்போதே அவர் பதக்கம் வெல்வார் என அனைவரும் நம்பிக்கை வைத்தனர். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் உலகின் நம்பர் 1 வீரராக அறியப்படும் ஜெர்மனியின் வெட்டரை விட அதிக தூரம் எறிந்து ஆச்சரியமளித்தார் நீரஜ். வெட்டர் 85.64 மீட்டர் தூரம் வரை எறிந்தார். இவர் 90 மீட்டர் தூரம் எறியக்கூடியவர். இறுதிப்போட்டியில் வெட்டருக்கு நீரஜ் டஃப் பைட் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆம் அது இன்று அரங்கேறிவிட்டது. இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதல் மூன்று எறிதல் முயற்சிகளில் நீரஜ் அபாரமாக எறிந்து தங்கம் வெல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தினார்.

ஆனால் வெட்டரோ நான்காவது ரவுண்டில் நாக்-அவுட்டாகி வெளியேறினார். கடைசி வரை சிறப்பாக எறிந்த நீரஜ் சோப்ரா தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்தார். அபினவ் பிந்த்ராவுக்குப் பின் தனிநபர் பிரிவில் இந்தியர் ஒருவர் பெறும் இரண்டாம் தங்கம் இதுவாகும். இதற்கு முன்னர் இந்திய ஹாக்கி அணி 8 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது. ஆசிய போட்டிகள், காமன் வெல்த் போட்டிகள், தெற்கு ஆசிய போட்டிகள், உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகிய போட்டிகளில் நீரஜ் ஐந்து தங்கம் பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago