Categories: இந்தியா

ராமநாதபுரம் மீனவர் மாயம்..! தேடும் பணி தீவிரம்..!

ராமநாதபுரத்தில் இருந்து மீனவர்கள் ஒப்பந்த முறையில் பல ஊர்களுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலம் மங்களூரிவிற்கு ராமநாதபுரத்தில் இருந்து சென்ற 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வருவர்.

இந்நிலையில் முத்துப்பேட்டை அருகே உள்ள மேட்டுகாரன் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன். இவரும் மங்களூருவில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவருகிறார். நேற்று காலை 11 மணிக்கு மங்களூருவில் இருந்து கண்ணதாசன் மற்றும் 11 பேர் ஒரு விசைபடகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கரையில் இருந்து 6 நாட்டிகல் தூரத்தில் சென்ற போது கடலில் சென்று கொண்டிருந்த கப்பலின் மீது படகு மோதியது.
இதில் விசைப்படகு கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் அனைவரும் கடலில் தத்தளித்தனர். இதனை கவனித்த, அந்த வழியாக விசைபடகில் வந்தவர்கள் 10 பேரை மீட்டனர். இதில் கண்ணதாசன் மட்டும் மாயமானார்.

Related Post

இது குறித்து மரைன் போலீசிடம் புகார் அளித்த கண்ணதாசனின் மனைவி கணவரை விரைந்து கண்டுபிடிக்க கோரிக்கை வைத்தார். காணாமல் போனவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அங்குள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago