ராஜினாமா செய்தது ஏன்? எடியூரப்பா விளக்கம்

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியது ஏன் என்று எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக எடியூரப்பா இன்று அறிவித்தார். பிற்பகலில் மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக கூறியிருந்தார். அதன்படி அவர் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதற்காக பதவி விலகினேன் என்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சராக பதவி வகிக்க வாய்ப்பளித்த பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி நட்டா ஆகியோருக்கு நன்றி.

Related Post

2 ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன் என்று கூறியிருந்தபடி இப்போது ராஜினாமா செய்துள்ளேன். பதவியில் இருந்து விலகும்படி எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. என் விருப்பப்படியே ராஜினாமா செய்துள்ளேன்’ என்றார்.

75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பா.ஜனதாவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால், எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து முதலமைச்சர் பதவியை பாஜக வழங்கியது. அப்போது, 2 ஆண்டுகள் முடிந்ததும் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் கூறியிருந்தது. அதன்படி அவர் பதவி விலகியுள்ளார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago