Categories: இந்தியா

வெள்ளை அறிக்கை.. பிடிஆர் சூசகம்.. பூனக்குட்டி வெளியே வரப்போகுது.. எடப்பாடி பழனிசாமிக்கு செக்!

சென்னை : நிதி மேலாண்மையில் அ.தி.மு.க. கண்ட தோல்வி “மாநில நிதி நிலை” குறித்து இனி வரப்போகும் வெள்ளை அறிக்கையில் மேலும் வெளிப்படப் போகிறது என்று கூறியுள்ள நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திட்டமிட்டுள்ளார்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அதற்கு முன்னதாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டு கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதி மேலாண்மை தவறுகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதில் பிடிஆர் உறுதியாக உள்ளார்.
அப்போது தான் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அரசால் என்னென்ன நலத்திட்டங்களை செய்ய நதி ஒதுக்க அரசால் முடியும் என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்றும் பிடிஆர் நம்புகிறார்.

இந்நிலையில் லாட்டரி சீட்டு விற்பனைய மீண்டும் கொண்டுவரக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், லாட்டரி கொண்டுவரப்பட உள்ளதாக கற்பனை கதைகளை பரப்ப வேண்டாம் என்று கூறினார். அந்த அறிக்கையில் தான் வெள்ளை அறிக்கை கூறியுள்ளார்.

சென்னை வெள்ளம்

இது பற்றி பிடிஆர் கூறும் போது, எடப்பாடி பழனிசாமியின் நான்காண்டு கால ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையால், தமிழ்நாட்டின் நிதிநிலைமை எத்தகையை சரிவினை சிதைவினைச் சந்தித்துள்ளது என்பதை 15ஆவது நிதிக்குழுவும், மத்திய ரிசர்வ் வங்கியும் ஏற்கனவே ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. 2015 சென்னை வெள்ளம் குறித்த சி.ஏ.ஜி அறிக்கை, 2017-18 மற்றும் 2018-19 மாநில நிதி குறித்த சி.ஏ.ஜி.யின் தணிக்கை அறிக்கை ஆகியவற்றை உரிய காலத்தில் சட்டமன்றத்திற்குக் கூட காட்டாமல் மூடி மறைத்து வைத்திருந்தவர் இதே எதிர்கட்சித் தலைவர்தான் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

Related Post

மாநி நிதி நிலை

திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்தத் தணிக்கை அறிக்கைகள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, சென்ற அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் தோல்விகள் பொது வெளிக்கு வந்துள்ளது. நிதி மேலாண்மையில் அ.தி.மு.க. கண்ட தோல்வி “மாநில நிதி நிலை” குறித்து இனி வரப்போகும் வெள்ளை அறிக்கையில் மேலும் வெளிப்படப் போகிறது” என்று கூறினார்.

எப்படி கையாள போகிறார்

இதன் மூலம் நிதி நிலை அறிக்கைக்கு முன்பு வெள்ளை அறிக்கை வெளியாகப்போவது உறுதியாகி உள்ளது. இந்த வெள்ளை அறிக்கையை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் நெருக்கடி அளிக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இதை எப்படி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கையாளப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

source: oneindia.com

Share
Tags: oneindia

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago