Categories: இந்தியா

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த திட்டம்

டெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 7 மாதங்களை நிறைவு செய்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளனர்.

குறிப்பாக மாநில தலைநகரங்களில் இருக்கக்கூடிய விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த மாநில ஆளுநர்களிடம் நேரில் வலியுறுத்தி குடியரசு தலைவரிடம் இந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்க உள்ளனர். டெல்லியை பொறுத்தவரை இந்த காஜிப்பூர் எல்லை பகுதியில் இன்றைய தினம் டிராக்டர் பேரணியை நடத்துவதற்கு விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

Related Post

இதற்காக இந்த பகுதி முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டிராக்டர்கள் பேரணிக்காக தயார் நிலையில் இருந்தாலும் கூட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த காவல்துறையினர், துணை ராணுவப்படையினர் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர். டிராக்டர் பேரணியை டெல்லிக்குள் நடத்திவிட கூடாது என்பதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள நிறைய மெட்ரோ நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த இடத்திற்கு டிராக்டர்களில் விவசாயிகள் பேரணியாக வருவதற்கு திட்டமிட்டுள்ளனர். இன்னும் எத்தனை நாட்கள் ஆனாலும் எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே 11 கட்ட பேச்சுவார்த்தையை நாங்கள் நடத்திவிட்டோம். இன்னும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago