Categories: இந்தியா

மேற்கு வங்கத்தில் லாக்டவுன் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிப்பு.. கேரளாவில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

மேற்கு வங்கத்தில் லாக்டவுன் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

நம் நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்கள் லாக்டவுனை அமல்படுத்தின. தற்போது கொரோனா வைரஸ் பரவல் ஒரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் பல மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்த வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையில் கேரளாவில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.

Related Post

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், பிராந்தியத்தின் கோவிட்-19 நிலைமையை பொறுத்து, பிராந்திய வாரியாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
ஜூன் 16ம் தேதிக்கு பிறகு உள்ளாட்சி அமைப்புகளால் லாக்டவுன் அமல்படுத்தப்படும். இது தொடர்பான அறிவிப்பு நாளை (இன்று) வெளியிடப்படும். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் புதிதாக 7,719 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது, மேலும் 161 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்று தெரிவித்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் கொரோனா லாக்டவுன் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார். அரசு அலுவலகங்கள் 25 சதவீத பணியாளர்களுடனும், தனியார் மற்றும் பெறுநிறுவன அலுவலகங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட அனுமதி உள்பட சில தளர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago