Categories: இந்தியா

ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்; கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய ஜி-7 உச்சி மாநாட்டில் வலியுறுத்தல்: கூட்டறிக்கையில் இந்தியா மற்றும் உறுப்பு நாடுகள் கையெழுத்து

ஜனநாயகத்தின் மீதான அச் சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும். கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என லண்டனில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டறிக்கையில் இந்தியா மற்றும் உறுப்பு நாடுகள் கையெழுத் திட்டுள்ளன.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் 47-வது ஜி-7 உச்சி மாநாடு கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடந்தது.
இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப் பான் ஆகிய உறுப்பு நாடுகளின் தலை வர்கள் பங்கேற்றனர். மேலும், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, தென்கொரியா, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர் களாக பங்கேற்றனர்.

பிரதமர் மோடி பேச்சு

மாநாட்டின் இறுதி நாளான நேற்று முன்தினம், ‘பில்டிங் பேக் டுகெதர் – ஓபன் சொசைட்டீஸ் அண்ட் எகனாமிக்ஸ்’ என்ற தலைப்பில் நடந்த அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் முதன்மை பேச்சாளராக பங்கேற்றார். அவர் பேசும்போது, ”இந்தியாவின் நாகரிக நெறிமுறைகளின் ஓர் அங்கம்தான் ஜனநாயகமும் சுதந்திர மும். ஆனால், தவறான தகவல் மற் றும் இணைய தாக்குதல் ஆகிய வற்றுக்கு திறந்த சமூகங்கள் இலக்காகின்றன என்பது கவலை அளிப்பதாக உள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களும் இதையே கூறியுள்ளனர்” என்றார். அத்துடன் கரோனா பரவல் தடுப்புப் பணிக்காக ஜி7 நாடுகள் உதவிக்கரம் நீட்டியதற்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கூட்டறிக்கை

கூட்டம் முடிவடைந்த பிறகு ‘திறந்த சமூகங்கள்’ என்ற பெயரில் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இதில் ஜி-7 உறுப்பு நாடுகள் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற நாடுகளின் தலைவர்களும் கையெ ழுத்திட்டுள்ளனர். ஆன்லைன் மற் றும் ஆப்லைன் வழி கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வதாகவும், ஊக்குவிப்பதாகவும் இந்த அறிக்கை அமைந்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

பயம் மற்றும் அடக்குமுறையில் இருந்து மக்கள் விடுபட கருத்து சுதந் திரம் உதவும். ஜனநாயக சுதந்திரத் துக்கு அரசியல் நோக்கம் கொண்ட இன்டர்நெட் தடைகள் ஒரு அச்சுறுத் தலாக இருந்து வருகிறது. அதிகரித்து வரும் சர்வாதிகாரம், தேர்தல் தலையீடு, ஊழல், பொருளாதார வற்புறுத்தல், தகவல்களை மாற்றிக் கையாளுதல், தவறான தகவல்கள், ஆன்லைன் பாதிப்புகள், இணைய தாக்குதல்கள், அரசியல் ரீதியாக ஊக்கப்படுத்தப்பட்ட இன்டர்நெட் தடைகள், மனித உரிமை மீறல்கள், முறைகேடுகள், தீவிரவாதம் ஆகியவற்றில் இருந்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறோம். இந்த அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post

இந்த கூட்டறிக்கையில் சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நடந்த கருத்து சுதந்திரத்துக்கு எதிரான விஷயங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ் மீர் மாநிலத்தை பிரிக்கும்போது இன்டர்நெட்டுக்கு தடை விதிக்கப் பட்டது, ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிரான புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் விவகாரம் குறித்தும் இதில் குறிப்பிடப்பட் டுள்ளது. இந்த விவகாரங்களும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான அச்சுறுத்தல்தான் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மாநாட்டில் பிரதமர் பங்கேற் றது தொடர்பாக மத்திய வெளி யுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேசும்போது, ”ஜனநாயக மதிப்பு களை மேம்படுத்தும் வழியாக கம்ப்யூட்டர் தகவல்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதை அழிக்கக் கூடாது” என வலியுறுத் தினார்.

ஜனநாயகமற்ற, சமநிலையற்ற உலகளாவிய அரசு அமைப்புகளை சுட்டிக் காட்டிய பிரதமர், திறந்தவெளி சமுதாயங்களின் உறுதிப்பாட்டின் சிறந்த அடையாளமாக பலதரப்பு முறையில் சீர்திருத்தம் வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பி3டபிள்யூ திட்டம்

பல்வேறு நாடுகளை சாலை மூலம் இணைப்பதற்காக, `பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ்’ (பிஆர்ஐ) என்ற திட்டத்தை செயல்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. அதேநேரம் தனது பொருளாதார, அரசியல் அதிகாரத்தை விரிவுபடுத்தவே சீனா இந்த திட்டத்தை செயல் படுத்துகிறது என சில நாடுகள் கூறி வருகின்றன. ஆசியா, ஆப் பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளுக்கு கடன் வழங்கவே இத்திட்டம் உருவாக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், ஜி-7 மாநாட்டில் சீனாவின் பிஆர்ஐ திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க, ‘பில்ட் பேக் பெட்டர் வேர்ல்டு’ (பி3டபிள்யூ) எனும் திட்டத்தை செயல்படுத்தலாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்மொழிந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை கூடுதல் செயலாளர் பி.ஹரிஷ் கூறும்போது, ‘ஜி7 மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ள பி3டபிள்யூ திட்டத்தில் இணைவது குறித்து மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை விரிவாக பரீசீலிக்கும்’ என்றார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago